மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்...!

motivation article
motivation articleImage credit - pxabay
Published on

சாதிக்க முடியும் என்று நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எண்ணங்களே ஒவ்வொருவரின் செயலையும் தீர்மானிக்கிறது. நல்ல எண்ணங்களை வலிமையாக எண்ண வேண்டும். ஒரு செயலை செய்யும் முன் முடிவெடுத்தல் அவசியமான ஒன்றாகும். செயலை செய்த பிறகு வருத்தப்படுவதை விட செய்யும் முன்னே திட்டமிடுவது நல்லதுதானே. அப்படி திட்டமிட்டு செய்யும் செயல் என்றுமே நம்மை நல்வழியில் இருந்து கைவிடாது.

நாம் செய்யும் செயலுக்கு முதலில் மற்றவர்களுடைய கருத்து களையும் கேட்டு சரியா? இல்லை தவறா? என்று ஆராய்ந்து அவர் களுடைய யோசனை சரி என்றால் ஏற்றுக்கொள்ளவும், தவறு என்றால் விட்டுவிடவும் பழகி கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கிறார்கள். அதில் சிலர் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். ஒரு சிலர் தவறாக எடுக்கின்றார்கள். 

உதாரணத்திற்கு தற்கொலை செய்து கொள்வோரை எடுத்துக் கொள்ளலாம். தங்களுக்குரிய பிரச்னை களுக்காக யோசிக்காமல் வாழ்வை முடித்துக் கொள்ள பார்க்கிறார்கள். வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டுமே. ஆகையால் முடிவுகளை சரியான வகையில் எடுத்தல் அவசியமாகும்.

சிறு சிறு விஷயங்களை கூட யோசித்து செய்தல் வேண்டும். அப்போதுதான் நாம் எண்ணிய இலக்கை அடைய முடியும். போட்டி போட்டு வாழும் சமுதாயத்தில் நாமும் போட்டியாளராக இருக்கிறோம். இதில் எது சரி? எது தவறு? நாம் செய்யும் செயல் நன்மையா? தீமையா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

என்றாவது ஒரு நாள் நாம் ஏன் எந்திரம்போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்று யோசித்தீர்களா? எத்தனை பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்; யாருக்கும் தீங்கு இழைக்காமல் நாம் இன்றைய ஒரு நாளை கடந்தோம் என்று எண்ணி பார்த்தோமா? ஒரு சிலர் மட்டுமே பிறர் நலனில் அவர்கள் அக்கறைக் கொண்டு கொள்கிறார்கள். இவையெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால், மிகவும் கொடுமையான செயல் என்ன வென்றால், ஒரே வீட்டில் கூட ஒவ்வொருவருடைய நலனை கண்டு கொள்பவர் இல்லை. ஏனென்றால், வீட்டில் ஒவ்வொருக்கொருவர் பேசுவது கூட இல்லை. வீட்டுக்கு சென்று அவரவர்களுடைய வேலையை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சுவாசப்பாதை பிரச்னைகளுக்கு கைக்கண்ட நிவாரணியாகும் நொச்சி இலையின் பலன்கள்!
motivation article

தமக்குரிய பிரச்னைகளை பிறரிடமோ, தமக்கு பிடித்தவர்களிடமோ கூறிவிட்டால் போதும் தெளிவு கிடைக்கும். தவறான முடிவுகளில் இருந்து விடுபட்டு சரியான முடிவுகளை எடுக்க உதவியாகவும், ஆறுதல் அடையவும் வழிவகுக்கும். குடும்பங்களில் எடுக்கும் முடிவுகள் எப்படி இருக்கும் என்றால் தம் பிள்ளைகளுக்கு பிடித்தவை, பிடிக்காதவை என்று அறிந்து அவர்களின் நலனை கருதில் கொண்டதாகவே இருக்கும். எப்போதும் விட்டுக்கொடுத்து போகும் எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

வாழ்க்கையை திட்டமிட்டு மேன்மைப்பட வாழவேண்டும். அதோடு இல்லாமல் நேர்மையாகவும், புத்திசாலித் தனமாகவும் முடிவுகளை எடுத்தல் வேண்டும். நேரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கைத் தரம் உயரும். இவர்கள் இப்படி சொல்லி விடுவார்கள், அவர்கள் அப்படி பேசி விடுவார்கள் என்று எண்ணி உங்களது முடிவுகளை ஏன் புதைத்து விடுகிறீர்கள்? நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருந்தால் மற்றவர்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பிடித்தால் போதும். மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com