
மிகவும் கசப்பானது தனிமையே. மிகவும் மரியாதைக்குரியவர்- அன்னையே, மிகவும் துயரமானது மரணமே. மிகவும் அழகானது-அன்புணர்வே!, மிகவும் கொடுமையானது-பழி வாங்குதலே!. மிகவும் கவலை தருவது செய் நன்றி மறப்பதே!, மிகவும் மகிழ்ச்சியானது -சிறந்த நட்பே!, மிகவும் வெறுமையானது -இல்லை என்பதே!, மிகவும் ரம்மியமானது- நம்பிக்கையே!
-டாக்டர் வில்பிரட் ஃபங்க்.
உலகில் மகிழ்ச்சி என்பது வெகு எளிதில் கிடைக்கக்கூடிய சக்தி. இந்தச் சக்தியை பெறத் தெரியாத காரணத்தால் தான். சிலர் கவலையும், துயரமும், துக்கமும் அடைகின்றனர். தெளிந்த உள்ளம், கடுமையான உடலுழைப்பு, பிறருக்காக பாடுபடும் பண்பு இவை தான் மகிழ்ச்சி உதயத்தின் நிலைக்களன்.
- ஹெலன் கெல்லர்.
பேசும்போது அறிந்தவற்றையே திரும்பக் கூறுகிறீர்கள் ஆனால் கேட்கும்போதோ, புதிதாக ஒன்றை அறிய வாய்ப்பிருக்கிறது. எனவே, குறைவாகப் பேசி, நிறைய கேளுங்கள்
- தலாய் லாமா.
வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம். உண்மையை பேசுங்கள். ஏமாறவோ, ஏமாற்றவோ இடம் அளிக்காதீர்கள். வீட்டிலும், வெளியிலும், எங்கும், எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.காலத்தை வீணாக்கினால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போகும். மனதில் நல்லெண்ணம் வளர வேண்டும் மறந்தும் தீமையை அனுமதிக்காதீர். தீமை எனத் தெரிந்த பின்னும் நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம். பேச்சு, செயலில் முரண்படும் மனிதர்களிடம் உறவாடக் கூடாது. கடவுளை சரணடைந்தால் ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி என எல்லாம் உண்டாகும்.
- பாரதியார்
பிரச்னை வெளியில் இல்லை. உன் மனதில் இருக்கிறது. தவறுகளை ஏற்றுக்கொண்டு உன்னை நீயே திருத்து. அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று. எந்த சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்காதே. கடவுளை ஆராயாதே. அன்பால் அவரை அடையலாம். கடவுளின் அடிமையாக இருப்பதே மேலான மகிழ்ச்சி. கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
- அரவிந்தர்.
ஒருவன் தின்னத்தகாதவைகளைத் தின்பதினால் கெட்டுப் போவதில்லை. ஆனால் சொல்லத் தகாதவைகளைச் சொல்வதினாலும், செய்யத் தகாதவைகளைச் செய்வதினாலும் கெட்டுப் போகிறான்.
-மார்க்
இவ்வுலகில் கடமையை விடக் கவலையே பலரைக் கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச் செய்வதை விட்டு கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.
-ராபர்ட்
வாழ்க்கை முடிந்துவிடப் போகிறதே என்று கவலைப் படாதே. அது ஆரம்பிக்காமலேயே இருந்துவிடுமோ என்று கவலைப்படு.
-நியூமன்
இரண்டு வாழைப்பழங்களை வைத்திருக்கும் சிம்பன்சி குரங்கிடம், எனக்கொரு பழத்தை கொடுத்தால், சொர்க்கத்தில் உனக்கு நூறு வாழப்பழங்கள் கிடைக்கும் என்று நம்ப வைக்க முடியாது. ஆனால் சிம்பன்சியை விட பல மடங்கு அறிவுடைய மனிதனை நம்பவைக்க முடியும்
- யூவால் நுவா அராரி. (வரலாற்று பேராசிரியர் இஸ்ரேல்)
மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் சிறந்த நண்பராகவும், அதன் கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால் உங்கள் எதிரியாகவும் இருக்கும்.
- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.