
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்க வைக்கிறது. அது சமூக ரீதியோ, கலாசார ரீதியோ இருக்கலாம். உங்கள் வாழ்க்கையை மாற்றுவது, குழந்தைகளைப் பெறுவது, தனிப்பட்ட அஸ்தஸ்துக்காக அதிகம் முயற்சிப்பது, சலிப்புடன் வாழக்கையை அனுபவிப்பது, பெற்றோருடன் செலவிடுவது போன்ற எண்ணங்களிலிருந்து வெளியேற வேண்டிய நேரம் இது.
நீங்கள் விரும்பும் வகையில் வாழ்க்கையை வடிவமைக்க விரும்பினால், இந்த கேள்விகளில் தெளிவுவேண்டும். அவை உங்கள் கவனத்திற்கு வரும்போது அதற்கு நீங்கள் என்ன முடிவு என்பதை தீர்மானிக்கவேண்டும்.
என்ன விஷயங்களை முழுமையாக கைவிட வேண்டும்
இல்லை என்று சொல்வது எளிதல்ல. இது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வார்த்தை. உதாரணமாக நான் ஒரு வழக்கறிஞராக விரும்பவில்லை. நான் குடிக்க விரும்பவில்லை. இதுபோன்று பல விஷயங்களை நாம் இல்லை என்று சொல்லிவிட்டால் நம் பாதை மாறும். அதே நேரத்தில் நமக்குத் தகுதியானதை தர மறுக்கும் எதையும் வேண்டாம் என்று சொல்லத் தயாராகுங்கள்.
எனக்காக நான் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்காக என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், எதை வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று புரிந்து கொண்டு பிறகு உங்களுக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
என்னை நான் எப்படி முழுமையாக மதிக்க முடியும்?
இதற்கு உங்கள் வாழ்க்கையை மாற்றி முன்னேற ஒரு முடிவை எடுங்கள். அது சிறியதாக இருந்தாலும் நீங்கள் முயற்சிக்க வேண்டும். மேற்கூறிய மூன்று கேள்விகளை நீங்கள கேட்டுக் கொண்ட பிறகு தெளிவு பிறக்கும். பிறகு கடைசியாக முடிவு எடுங்கள்.
பிடிக்காதவர்களை சமாளிக்க
உங்களுக்குப் பிடிக்காதவர்கள் உங்களிடம் ஏதேனும் பேசும்போது அவர்களை திட்டுவது எளிது. ஆனால் அந்த சூழல் உங்களை கண்ட்ரோல் செய்வவது போலாகிவிடும். இதைத் தடுக்க அவர்கள் என்ன கூறினாலும் அதை பாசிடிவாக கையாளுங்கள்.
உங்களை பிறர் தூண்டிவிடும் பார்க்கிறார்களா என்று பார்க்கவேண்டும். அந்த நேரத்தில் உணர்ச்சிவசப் படுவதைத் தடுத்து நடுநிலையுடன் இருக்க வேண்டும். நீங்கள் கோபப்பட்டாலோ அல்லது மனம் துன்பப்பட்டு அழுதாலோ அது அவர்களுக்குத் தீனி போடுவது போல் இருக்கும். எனவே அவர்கள் பேசுவதை காதில் வாங்க வேண்டாம்.
உங்களை ஒருவர் எரிச்சல்படுத்த நினைக்கும் போது அந்த சமயத்தில் அதைக் கடந்து செல்வது கடினமாகத்தான் இருக்கும். எனவே அதை பொய்யாக நீட்டிக்க கற்றுக் கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் அவரை சுலபமாக கடந்து விடலாம்.
நீங்கள் அந்த பிரச்னைக்குரிய நபரிடம் பேசும்போது சண்டை அதிகரித்தால் உங்கள் பேச்சுக்களை உடனே நிறுத்தவும். அவர்களிடம் ஏதாவது வேலை ஆகவேண்டுமென்றால் அதற்குரிய விஷயங்களை மட்டும் பேசி அதற்கு மேல் ஒருவார்த்தை பேசவேண்டாம்.
நம்மால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வெறுப்பையும் பிரித்துப் பார்க்க முடியாது. இதனால் பிரச்னைக்குரியவர் நல்லது கூறினாலும் நமக்குத் தவறாகவே தெரியும்
உங்களுக்கு ஒரு நபரின் மீது வெறுப்பு இருந்தால் அதை பிற வெறுப்புகளின் மீது காண்பிக்க வேண்டும். அதேபோல் உங்களை ஒருவர் ஒருமுறை வெறுத்து இருந்தால் கூட அடுத்தடுத்த வருடங்களில் உங்களை மதிக்கலாம். எனவே வெறுப்பை மனதில் வைப்பது நல்லதல்ல.