
உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள் இல்லையெனில் இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்.
- சார்லி சாப்ளின்
இன்றைய உலகில் அசட்டு சிரிப்பு சிரிப்பவர்களும், கள்ளச் சிரிப்பு சிரிப்பவர்களும், ஆபாசச் சிரிப்பு சிரிப்பவர் களும்தான் அதிகமாகி வருகிறார்கள். உண்மையாக மனம் திறந்துச் சிரிப்பவர்கள் குறைந்து விட்டார்கள்.
- பிரைட்டன்
நகைச்சுவை பயனுடையதாக ஆவது சொல்வேன்ப்பொறுத்தன்று : கேட்போனையே பொறுத்தது.
- ஷேக்ஸ்பியர்
உலகின் மிகச்சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்! - ஆர்தர் ஸ்டோன்
நல்ல நகைச்சுவை புனிதமானது. அதில் குறைகான முடியாது.
-சென்டர்ட்டன்
மனதில் சாந்தி உடையவர். நகைச்சுவை உணர்ச்சி உடையவர்.
- ஜெரால்டு
நகைச்சுவை என்பது சிறந்த விஷயம். அதை கேலி செய்பவன் அதை அறியாதவன்.
-பியர்ஸ்
ஒருமுறைகூட சிரிக்காமல் கழித்த நாளே வீணாகக் கழித்த நாளாகும்!
- சாம்ஃபோர்ட்
முரணான விஷயங்களை முட்டிக்கொண்டு, பின்பு சமாதானமடைவதைத்தான் நகைச்சுவை என்கிறோம், -லேலண்ட்
தீங்கு செய்யாத நகைச்சுவை, சிந்தனையின் மனம் ஆகும்.
-ஸிடனி ஸ்மித்
வேறுபடும் பொருள்களிகளிடையே உள்ள ஒற்றுமையையும், ஒன்று போலுள்ள பொருட்களிடையே உள்ள வேற்றுமையையும் அறிவதே நகைச்சுவையாகும்.
- மாடம் தி ஸ்டேன்
நாம் விருந்துக்குப் போகும்போது உடுத்த வேண்டிய சிறந்த உடைகளில் ஒன்று நகைச்சுவை உணர்வு!
- தாக்கரே
நகைச்சுவை எங்கே உள்ளதோ, அதன் அருகிலேயே சோகமும் இருக்கும்.
-லிப்பின்
ஒருவன் சிரிக்கும் போதெல்லாம் மரணம் ஒத்துப் போடப்படுகிறது.
-மர்லட்ஜ்
நகைச்சுவை என்பது உங்களை சிரிக்கக் செய்வதுதான் என்றாலும். உயர்தர நகைச்சுவை, சிரிப்போடு ஒரு துளி கண்ணீரையும் வரவழைத்து விடும்.
-பெர்னார்ட்ஷா
வாய்விட்டு சிரியுங்கள். இதயத்தில் உள்ள சுமைகள் தாமாகவே இறங்கிவிடும். சிரிக்கத் தெரியாத மனிதர்கள் வாயுள்ள பிராணிகள்.
- மு.வரதராஜன்
எதுவுமே சிரிப்புடன் கூடியதாக இருக்கும் அது மற்றவர்களின் அனுபவமாக இருந்ததால்.
- வில் ரோஜர்ஸ்
துன்பம் வந்தாலும் தாக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள நகைச்சுவை உணர்ச்சிபோல பயன் தருவது வேறெதுவும் கிடையாது!
- ஹிக்கின்சன்
சிரிப்பது என்பது ஒரு புனிதமான பிரார்த்தனைக்குச் சமம்! -ஓஷோ
நகைச்சுவை மிகுந்தவர் அனைவரும் அன்பு மிகுந்தவர் என்பதை அனுபவத்தில் அறிவேன்!
- அடிசன்