
எந்த ஒரு செயலை செய்ய முனைந்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான அடிப்படை பண்புகள் தேவை. அப்படிப்பட்ட அடிப்படை பண்புகள் என்ன என்பதையும், அது எப்படி வெற்றிக்கு வித்திடுகிறது என்பதையும் இப்பதிவில் காண்போம்.
தன்னம்பிக்கை :
தன்னை சரியாக மதிப்பிட்டு அதன் அடிப்படையில் தன்னம்பிக்கையோடு விளங்க வேண்டும் . இயற்கை இசை, கலைகள் பால் ஆர்வம் காட்ட வேண்டும். இதனால் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் நம் கற்று அறிந்த இசை போன்றவை மேலும் விரிவடையும் .அது விரிவடைந்தால் பொருளாதாரம் மேம்படும். பொருளாதாரம் மேம்பட்டால் தன்னம்பிக்கை பிறக்கும் .
தற்சார்பு:
இயன்றவரை பிறர் உதவியின்றி தன்னை நம்பியே தன்னைச் சார்ந்தே செயல்பட வேண்டும்.
மகிழ்ச்சி:
எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் காட்சியளிக்க முயல வேண்டும். அன்றாடம் நடக்கும் சிறிய நிகழ்வுகளிலே மகிழ்வை காணுங்கள் .அது மகிழ்ச்சியடைவதை ஒரு பழக்கமாகவே ஆக்கிவிடும்.
துணிவு :
நல்ல பணிகள் புரிதல் தனது சரியான உரிமைகளைக் காத்தல் ஆகியவற்றில் துணிவோடு செயல்பட வேண்டும். எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கு என்பதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
அமைதி:
ஆரவாரமின்றி ,படபடப்பின்றி அமைதியுடன் விளங்க வேண்டும். தேவைக்கேற்ற சரியான உழைப்பை அறிவோடு செய்ய வேண்டும். தொடர்ந்து நற்பணியை விடாது இலக்கை எட்டும் வரை மேற்கொள்ள வேண்டும்.
நம்பகத்தன்மை :
சொல்லிலும் செயலிலும் நம்பகத் தன்மையோடு மாறாது நடந்து கொள்ள வேண்டும். முன்னறிவு எது நல்லது கெட்டது எது சரி, தவறு என்று உணர்ந்து எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஓத்துணர்வு :
பிறர் நிலையில் தன்னை வைத்து அவர் உணர்வுகளை உணர்ந்து மதிக்க வேண்டும் .எந்த நிலையிலும் கர்வம் இன்றி பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் .பிறரிடம் கனிவு காட்ட வேண்டும் .பிறர் அன்பிற்கும் உதவிக்கும் நன்றி காட்ட வேண்டும்.
பெருந்தன்மை:
பிறர் தவறுகளையும் பெரிது படுத்தாத பெருந்தன்மை யோடு நடந்து கொள்ள வேண்டும். இடர்ப்படுவோருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் .தேவைக்கேற்ற சரியான உழைப்பை அறிவோடு செய்ய வேண்டும்.
ஆய்வறிவு :
எதனையும் அப்படியே நம்பாது ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் .கருத்துக்களையும் விவரங்களையும் ஒட்டி ஆய்வு செய்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும் .புதியனவற்றை ஒதுக்கி விடாது நன்கு கேட்டு ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளையும் மனிதர்களையும் திறந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும் .படித்தல், கற்றல், பயிலல் போன்ற அறிவுப்பூர்வமான செயல்களில் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவையெல்லாம் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வித்திட்டு மனநலம் காக்க உதவும் அடிப்படை பண்புகள். ஆதலால் இவைகளை பின்பற்றி பயனடைவோம்; வெற்றி பெறுவோம்!