மனத் தெளிவுக்கான மகத்தான குறிப்புகள்!

Motivation Image
Motivation Imagepixabay.com

பிறருக்கு தீங்கு நிகழ்ந்தால் அது நல்ல செய்தி, அதே தீங்கு நமக்கு நடந்தால் அது கெட்ட செய்தி என்று நினைப்பவர்கள் நம் சமுதாயத்தில் பலருன்டு. இப்படிப்பட்டவர்கள். இறுதிவரை மன உளைச்சலில்தான் வாழ வேண்டும். இந்த மனநிலையை எப்படி மாற்ற வேண்டும் ரொம்ப சுலபம். உங்கள் மனம் வைத்து வர உங்கள் மனம் தெளிவடைய இது கீழே இருக்கு குறிப்புகளை படியுங்கள்.

மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பதுதான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும். மனிதநேயம்: பிறரையும் தன்னைப்போல நேசிப்பதே மனிதநேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்.

கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின்போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி.

தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்துவிடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித்தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.

பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகிவிடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.

பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகிவிட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மை யாகும். மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணை பிரியாதது. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும். உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.

பய உணர்வுகளே பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.

மனதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.

இதையும் படியுங்கள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில ஆயுர்வேத மூலிகை பலன்கள்!
Motivation Image

பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடுவதே சிறந்த அணுகுமுறை.

சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும். மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com