நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில ஆயுர்வேத மூலிகை பலன்கள்!

Some Ayurvedic Herbal Benefits to Boost Immunity
Some Ayurvedic Herbal Benefits to Boost Immunityhttps://www.india.com

டலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதில் துளசி, அஸ்வகந்தா மற்றும் மஞ்சள் போன்ற மூலிகைகளின் பங்கு அளப்பரியது. இவை உடலில் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இருமல், தொண்டைப்புண், தொண்டை வலி, உடல் சோர்வு ஆகியவை குணமாகும். முழு தானியங்கள், புரதங்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி, துத்தநாகம் நிறைந்த உணவுகள் போன்றவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அஸ்வகந்தா, கிலோய், அதிமதுரம், துளசி மற்றும் நெல்லிக்காய் ஆகிய ஐந்து ஆயுர்வேத மூலிகைளின் அற்புதப் பலன்களை இந்தப் பதிவில் காண்போம்.

அஸ்வகந்தா: ஆயுர்வேதத்தின் முக்கியமான மூலிகைகளில் இதுவும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் சிறந்த மூலிகை. அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை இரண்டு கப் நீரில் கொதிக்க வைத்து சிறிது இஞ்சியை சேர்த்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்டு ஆறியதும் சிறிது தேன் கலந்து பருகவும். இது சிரப் மற்றும் கேப்சூல் வடிவிலும் கூட கிடைக்கிறது.

கிலோய்: இது ஆன்ட்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இரண்டு ஸ்பூன் கிலோய் சாறுடன் சிறிது நீர் கலந்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். இதுவும் சிரப் வடிவிலும்  காப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கின்றது.

அதிமதுரம்: நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி நிறைந்தது. உடலிலுள்ள தேவையற்ற பாக்டீரியா மற்றும் கிருமிகளை கண்டறிந்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. நோயிலிருந்து காக்கக்கூடிய சக்தி பெற்ற அதிமதுர பொடியை 10 கிராம் அளவு எடுத்து 200 கிராம் டீத்தூளுடன் கலந்து விடவும். இதனை தினசரி நாம் டீ தயாரித்து பருக, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

துளசி: நோய் தொற்றுகளை தடுப்பதில் முக்கியப் பங்கு வைக்கும் துளசியை டீ போல் தயாரித்து பருகலாம். ஒரு கப் நீரில் பத்து துளசி இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை விதம் பருக, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். துளசி செடிகளை வீட்டில் வளர்க்கலாம். துளசி இலை பொடிகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றி, தன்னம்பிக்கையை மேம்படுத்தும் 9 விஷயங்கள்!
Some Ayurvedic Herbal Benefits to Boost Immunity

ஆம்லா (நெல்லிக்காய்): வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த நெல்லிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சிறந்த காயகல்பமாக விளங்கும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இதனை தினமும் காலையில் பச்சையாகவோ அல்லது ஜூஸாக செய்தோ சாப்பிடலாம். நெல்லிக்காயை தினம் ஒன்று என சாப்பிட, பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லது. இது முரப்பா வடிவிலும் கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாறு அல்லது ஆவியில் வேகவைத்த நெல்லிக்காயை தினம் ஒன்றாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com