
நம் திறமைகள் குறித்து நமக்கே கேள்விகள் எழலாம். நம் தன்னம்பிக்கையை உணராமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதை வளர்க்கப் பாருங்கள். அதற்கு சிறிய பழக்கங்களை ஏற்றுக் கொண்டு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
நாம் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் சிறிய வெற்றிகளைக் கொண்டாடுவது நமக்கு சரியான திசையில் செல்வதற்கான வழியாக இருக்கும். இது உந்துகோலாகி உங்களுக்கு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.
நீங்கள்தான் உங்கள் சிறந்த நண்பன். திட்டமிட்டபடி நடக்காதபோது நீங்கள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஒவ்வொரு தவறுக்கு உங்களை விமர்சிப்பதற்கு பதில் உங்களிடம் நீங்களே அன்பாக பேசுங்கள். நேர்மறையான சுயபேச்சுக்கள் உங்கள் தவறுகளை மறைப்பவை அல்ல. அவை உங்களுக்கு உற்சாகம் கொடுப்பதாகும். உங்கள் தவறுகளை எண்ணி சோர்ந்துவிடாமல் இருப்பதற்கான வழி.
ஏதேனும் தவறு நடக்கும்போது வருந்துவது அதையே எண்ணிக்கொண்டு அமர்ந்துவிடுவது எளிது. ஆனால் இது உங்கள் தன்னம்பிக்கைக் குலைத்துவிடும். அதற்குத்தான் உங்கள் மனநிறைவு என்பது நிகழ்காலத்தை உணர்த்தும் ஆயுதமாகும் நீங்களே உங்களிடம் நிகழ்காலம் குறித்துப் பேசுங்கள். அது ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது தியானத்தின் மூலமாக இருக்கலாம். இதனால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள்.
இந்தப் பரபரப்பான உலகில் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலக முடியாது. சமூக வலைதளங்கள் செய்திகள் நம்மை நாமே தவறாக எண்ண வைக்கின்றன. குறிப்பாக மற்றவர்களோடு உங்களை ஒப்பீடு செய்யாதீர்கள். உங்களை உயர்த்தும் விஷயங்களை மட்டும் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன இருக்க வேண்டும் என்பதில் கவனம் வைத்தால் உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கப்படாது.
உடற்பயிற்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும் போது எண்டார்ஃபின் வெளியேறும்போது உற்சாகம் ஏற்படும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபட்டு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யவும்.
உங்களைச் சுற்றி நேர்மறை எண்ணம் கொண்ட நபர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்மறை நபர்கள் உங்கள் தன்னம்பிக்கையை குலைப்பார்கள். உங்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள் மூலம் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் சிறப்பை வெளிக் கொண்டுவரும் நபர்களுடன் உறவில் இருங்கள்.
நன்றி என்பது உங்களின் மனநிலையை மாற்றும் வழியாகும். உங்களுக்குக் கிடைக்கும் நல்லது குறித்து நன்றி உணர்வோடு இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகமாகிறது. நீங்கள் நன்றி செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து எழுதி வைக்கலாம்.