
"ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே"என்று ஒரு பாடல். அதற்கேற்றாா்ப்போல ஒவ்வொரு மனிதனிடமும் ஆசை ஏதாவது ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது.
ஆசை "ஆசை" அது இருக்கலாம் ஆனால் அது பேராசையாக மாறிவிடக்கூடாது. பேராசை பெரு நஷ்டம், என்பதுபோல அந்த பேராசையானது பல வழிகளில் மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு விடுகிறது என்பதே நிஜம்.
பொதுவாக மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவா்கள் தவறான வழிகளில் பேராசை காரணமாக ஏதாவது ஒரு வகையில் ஏற்படும் நஷ்டத்தை லாபத்தில் நஷ்டம் என இயல்பாக கூறிவிட்டுப்போய் விடுவாா்கள். அவர்களுக்கு அது பொிய விஷயமல்ல. இதுபோன்ற விஷயங்களை கீழ்க்கானும் பழமொழிகளோடு ஒப்பிட்டுப் பாா்க்கலாம்.
"கொக்குக்கு ஏன் மூக்கு நீளம்"! (பொல்லாத ஆசை மட்டுமல்ல எதையும் பேராசையுடன் பாா்க்கக்கூடாது)
"சென்ற செவ்வாய் பாா்க்கப்போனால் வந்த செவ்வாய் கைவிட்டுப்போனது போல"! (ஒரு செயலை செய்யப்போய் ஏற்கனவே உள்ளதையும் இழந்துவிடுவது)
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"! (தீமையும் நன்மையும் அவரவர் செயல்களால் வருவது)
லாபத்தில் நஷ்டம் என பணம் படைத்தவர்கள் கூறிவிடலாம். ஆனால் நடுத்தர வா்க்கத்தினா்களுக்கு பொிய சுமை மட்டுமல்ல குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் நிலை. நாம் பேராசைக்கு ஆளாகி செய்யும் தவறான முதலீடுகள் நமது வாழ்க்கையையேபதம் பாா்த்துவிடுகிறது.
சில நிறுவனங்கள் ஆசை வாா்த்தைகாட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட காலத்திற்கு எங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக (பாதிக்குப்பாதி) என கவா்ச்சிகரமாக விளம்பரம் செய்வது வாடிக்கை. பல நபர்களை சோ்த்துவசூல் செய்துவிடுவதோடு ஓரிரு மாதங்கள் வட்டித்தொகை கொடுப்பாா்கள்.
அதன் பிறகு பட்டை நாமம் போட்டுவிட்டு, இரவோடு இரவாக அலுவலகத்தை காலி செய்துவிட்டு கம்பி நீட்டி விடுவாா்கள்.
இது எப்படி சாத்தியமாகும், குறைந்த முதலீட்டிற்கு கூடுதல் வட்டியாம்! கேழ்வரகில் நெய்யா வடியும்?
நம்மிடம் நம்மால் சேமித்து வைக்கப்பட்ட தொகையை வங்கிகளிலோ, அல்லது அஞ்சல் நிலையங்களிலோ, முதலீடு செய்ய வேண்டாம் என யாா் தடுத்தது. அப்படிப்பட்ட சூழலில் நம்மோடு சோ்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையை நாடவேண்டியநிலை இது எதனால் வருகிறது! காவல்துறை எவ்வளவோ விழிபழபுணர்வு தந்தாலும் இதற்கு முடிவே கிடையாது.
இந்த இடர்பாடு நமக்கு தேவையா? சிலர் செல்போனில் வரும் தேவையில்லா அழைப்புகளை அப்படியே நம்பி ,அவர்களது ஆசை வாா்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அவர்கள் கேட்கும் தகவல்களைச் சொல்லி வங்கியில் இருந்த இருப்பை எல்லாம் இழந்து போவதும் வாடிக்கை.
இப்படி ஒரு வழியோ, இரண்டு வழிகளோ அல்ல. பல வழிகளில் ஏமாந்துபோய் தானும் நஷ்டமாகி நம்மைச் சாா்ந்தவர்களுக்கும் கூடுதல் சுமையைத் தருகிறோம் என்பதே நிஜம்.
நம்மை யார் என்றே தொியாமல் நமது செல்போனுக்கு குலுக்கலில் காா் விழுந்துள்ளது, 12லட்சம் மதிப்பு. அதற்கு டாக்ஸ் பனிரெண்டாயிரம் கட்டி டெலிவரி எடுக்க வேண்டும், தொகையை அனுப்புங்கள் என தொலைபேசியிலும் குறுஞ்செய்தியாகவும் வருவதை நம்பி இருப்பதை இழப்பது தொடர்கதையே!
எப்படி கொடுக்கமுடியும் என்பது சிந்திக்க தொியாமல் செய்யும் அவசரகதியான காாியம் நமக்கு பலவகையில் மனஉளைச்சலையே தந்துவிடுகிறதே!
ஆக "புத்தர்" சொன்னதுபோல பேராசையே பெருநஷ்டம் என்பதை உணர்ந்து வாழ்வதே நல்லது. ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றும் நபர்கள் இருக்கத்தான் செய்வாா்கள். நாம்தான் கவனமாக செயல்பட வேண்டும் பேராசையை கைவிடுவோம் பெருமைபட வாழ்ந்திடுவோம்"!!