உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க உங்களின் தனித்தன்மையை வளருங்கள்..!

Motivation Image
Motivation ImageImage credit- pixabay.com

ங்களை நீங்களே சரியாக எடை போட்டுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது உங்களுக்கு நீங்களே மரியாதை கொடுத்துக் கொண்டால்தான் இயலும். உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்றபடி முடிந்தளவு முயற்சி செய்து, உங்கள் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நாம் அனைவரும் ஒவ்வொருவரும் அவரவருக்கு என்று தனிப்பட்ட தன்மைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறோம. உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை, ஒருவரைப்  போன்று மற்றவர் தோன்ற முடியாது என்பதை உணராமல். பிறரை போல இருக்க முயற்சிப்பதில்தான் பல துன்பங்கள் உருவாகின்றன. இது ஒரு நோய், நாம் நாமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்நோய்க்கு மருந்து. நம்முடைய தனித்தன்மையை அபிவிருத்தி செய்வதில்தான் நம்முடைய வெற்றியே அடங்கியுள்ளது.

கடைசி காலத்தில் இருக்கும் வயதானவர்களை அவர்கள் இறக்கும் வரை  உடன் இருந்து பார்த்துக் கொள்ளும் ஒரு நர்ஸ்  பணி அவருடையது. அவர்கள் கூடவே அவர்  இருப்பார். அதுதான் அவருடைய வேலை. அவர் பணியின் இடையே சாகும்போது, "உங்களுக்கு ஏதாவது  மனவருத்தம்  இருக்கா?"னு எல்லோரிடமும் கேட்டு அதை ஒரு புத்தகமாக வெளியிட்டர்.

அதில் பல பேர் சொன்ன பதில்கள் இதுதான்:

1) எனக்கு பிடிச்ச மாதிரி வாழாம, அடுத்தவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி வாழ்ந்துட்டேன்.

2) நான் வேலை வேலைனு ரொம்ப ஓடியிருக்கக் கூடாது.

3) நான் நினைச்சதை சொல்றதுக்கு தைரியம் இருந்திருக்கணும்.

4) என் நண்பர்களோட டச்ல இருந்திருக்கணும்.

5) நான் சந்தோஷமா இருந்திருக்க நானே அனுமதிச்சுருக்கணும்.

பலரையும் பயங்கரமா யோசிக்க வைத்த விஷயங்கள்  இது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை வாழ்ந்த வாழ்க்கை, இப்போது வாழும் வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து, இனி வாழப்போகும் வாழ்க்கை எப்படி இருந்தால் நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று ஒரு எதிர்கால  செயல் திட்டம் போடுவது உத்தமம்.

வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவோருக்கு 10 கட்டளைகள்;

1) நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் படிக்க ஒதுக்குங்கள். 10 ஆண்டுகளில் நீங்கள் விரும்பும் துறையில் உச்சத்தில் இருப்பீர்கள்.

2) பிறர் பேசும்போது முழுமையாக கவனியுங்கள்.

3) அவசியம் ஏற்பட்டால் தவிர, பேசுவதை குறையுங்கள்.

4) நீங்கள் இருக்கும் இடத்தில், உங்களிடம் இருப்பதை வைத்து உங்களால் என்ன முடியுமோ அதை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
தீர்வு காணுங்கள் வாழ்வு தித்திக்கும்!
Motivation Image

5) ஒரு நாளைக்கு முன்னரே திட்டமிடுங்கள்.

6) வாழ்க்கை மற்றும் வேலை  இரண்டிலும் சமநிலை பின்பற்றுங்கள்

7) ஒரே குறிக்கோள் பின்னால் ஓடாதீர்கள்.

8) நீங்கள் முடிவு எடுக்காதவரை பதில் என்பது இல்லை என்பதாகத்தான் இருக்கும்.

9) சக்தி வாய்ந்த சொத்து நம்மிடம் இருக்கும் நம் அறிவு மட்டுமே. அதற்கு பயிற்சி கொடுங்கள்.

10) சவாலான நேரங்களில் உங்களால்  ஒரு புள்ளியைக்  கூட பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு வாழ்வில் எதற்கும் தயாராக இருங்கள்.

தோல்விக்கு நீங்கள்தான் காரணம் என்று உங்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள். அது உங்களை மேலும் கீழேதான் தள்ளுமே தவிர உங்கள் இலக்கை அடைய ஒரு போதும் உதவாது. நீங்கள் உங்களுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com