Motivation image
Motivation imageImage credit - pixabay

தீர்வு காணுங்கள் வாழ்வு தித்திக்கும்!

Published on

ங்களுக்கு வரும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உங்கள் ஆழ்மனதிலே புதைந்து கிடக்கிறது. அப்படி இருந்தும் பிரச்னைகளைத் தீர்க்க முடியாததற்குக் காரணம் ஒன்று பிரச்னையை சரியான முறையில் அணுகாமல் அசிரத்தையாக இருப்பது  அல்லது அதற்கு நேர் எதிராக  நடந்து விட்டதாக எண்ணி பதறித் துடிப்பது.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அலட்சியமும் கூடாது. அவசரமும் கூடாது. உணர்ச்சிகளைத்  தள்ளி வைத்துவிட்டு மெதுவாக யோசித்தால்  போதும்  பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு கிடைத்துவிடும்.

நீங்கள் பிரச்னையை எழுதிப் பாருங்கள். தீர்வு தெரியும். இது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம்.  ஆனால் நம்முடைய மூளையின் லாஜிக்கல் பகுதியும் எழுத்தாற்றல் பகுதியும் ஒரே வரிசையில் இருக்கிறது. அதனால் பிரச்னையை எழுதிப் பார்க்கும்போது மூளையின் லாஜிக் பகுதி  ஆக்டிவேட் ஆகி அந்தப் பிரச்னைக்கான தீர்வை கண்டுபிடிக்கும் வகையில் சிந்தனையைக் தூண்டும். உடனே மூளை சரியான வழியை முன்னிறுத்தும்.

இந்த விஷயத்தில் இன்னொரு பிரிவினர் உண்டு. அவர்கள் பெரிய பெரிய பிரச்னைகளை சமாளித்து விடுவார்கள். சிறிய சங்கடத்தில் சோர்ந்து போவார்கள். இதற்கு மனமே காரணம்.  மனதில் சுமை. அழுத்தத்தால் ஏற்படும் விளைவே இது. வளர்ந்த குழந்தைதான் பார்க்கும் கேட்கும்  அனைத்தையும் தெரிந்து கொள்கிறது. கோபம் வருத்தம் மகிழ்ச்சி இனம் கண்டு புரிந்து கொள்கிறது.

ஒவ்வொன்றை அது சந்திக்கும்போது அவற்றுக்கு தனித்தனி ஃபோல்டர்களை உருவாக்கி ஆழ்மனதில் சேமித்துக் கொள்கிறது. வளர வளரத்தான் சந்திக்கும் பிரச்னைகளை இந்த உணர்ச்சிகளின் அடிப்படையான ஃபோல்டர்களிலேயே சேர்த்து வைத்துக் கொண்டு வருகிறது. பிரச்னைகள் தீர்ந்தால் அதற்கான ஃபைலும் மூடப்பட்டு விடுகிறது. ஆனால் தீர்க்கப்படாத கோபம் வருத்தம் சலிப்பு  போன்றவை ஃபோல்டரில்  நிரம்பி வழிககிறது. இப்படி அதிகரிக்கும் சுமை ஏதாவது ஒரு சிறு பிரச்னை வந்தாலும் மனம் தாங்காமல் அழுந்திப் போகிறது. 

இதையும் படியுங்கள்:
அக்னி நட்சத்திர வெயிலுக்கு இயற்கையான சில அழகு டிப்ஸ்கள்!
Motivation image

மயில் இறகேயானாலும் அதிகமானால்  வண்டியின் அச்சாணி முறிந்து விடும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பது போல்  விரக்தி வெறுப்பு போன்ற  உணர்ச்சிகளை  வெளியேற்றாமல் அப்படியே அடுக்கி வைப்பதால்  மனதின் அச்சானி  நிம்மதியே முறிந்து போகிறது.

பிரச்னைகளை அவ்வப்போது மன்னித்து மறந்து தினமாகக் கடந்து விட்டால் அது குப்பையாக சேர்ந்து உங்கள் மனதில் சுமையாகி அழுத்தாது. மனம் இலேசாக இருந்தால் தெளிவாக சிந்திக்கும். பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு கிட்டும். சங்கடம் விலகி சந்தோஷம் குடியேறும் மகிழ்ச்சி நிறையும்.

logo
Kalki Online
kalkionline.com