ஜோதிடம் மற்றும் பிறந்த மாதங்கள் நீண்ட காலமாகவே தனிநபர்களின் குறிப்பிட்ட பண்புகளுடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
சித்திரையில் பிறந்தவர்களின் நல்ல பழக்கங்கள்:
விடாமுயற்சி: சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் செய்யும் வேலையில் ஒரு நெறிமுறையுடன் இருப்பார்கள். இவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு பல தருணங்களில் இவர்களது வெற்றிக்கு வழிவகுக்கும்.
பொறுப்புணர்வு: சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் கடமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கடமைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு பிறருக்கு நம்பகமான நபர்களாக இருப்பார்கள். இந்தப் பண்பு அவர்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிக்கக் கூடியவர்களாக மாற்றுகிறது.
ஏற்றுக்கொள்ளும் தன்மை: சித்திரையில் பிறந்தவர்கள் நேர்மறையாகவும் நெகழ்வுத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டங்களையும், யுக்திகளையும் சரி செய்து வாழும் குணமுடையவர்கள். இந்தத் தன்மை அவர்கள் தங்களின் வாழ்க்கையில் சவால்களை எளிதில் எதிர்கொண்டு கடந்துசெல்ல உதவுகிறது.
ஆர்வம்: இவர்களுக்கு முக்கியமான விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் நேர்மறையான தாக்கம் ஏற்படும். தனிப்பட்ட மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் புதிய யோசனைகளைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
சித்திரையில் பிறந்தவர்களின் தீய பழக்கங்கள்:
அதீத சிந்தனை: சித்திரையில் பிறந்தவர்களுக்கு இருக்கும் முதல் கெட்ட பழக்கம் எதுவென்றால், அதீத சிந்தனைதான். இவர்கள் பெரும்பாலும் சூழ்நிலைகளை அதிகமாக சிந்தித்து பகுப்பாய்வு செய்வதால், தேவையற்ற கவலைகளுக்கு வழி வகுக்கிறது.
பொறுமையின்மை: சித்திரை மாதத்தில் பிறந்த சில நபர்களிடம் பொறுமையின்மை இருக்கலாம். அவர்களின் அதிக எதிர்பார்ப்பு மற்றும் விரைவாக அனைத்தும் நடக்க வேண்டும் என்ற விருப்பம், விரக்திக்கு வழிவகுக்கும். எனவே அவர்கள் பொறுமையை வளர்த்துக்கொண்டு, படிப்படியான முன்னேற்றத்தின் மதிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பிடிவாதம்: இவர்களிடம் இருக்கும் பிடிவாத குணம் மற்றொரு தீய பழக்கமாகும். இவர்கள் மாற்றத்தை விரும்பாததால், தங்களது கருத்தே சரியானது என்பதில் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். மாற்றுக் கண்ணோட்டங்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது இவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
தள்ளிப்போடுதல்: என்னதான் தள்ளிப்போடுதல் பெரும்பாலானவர்களிடம் இருக்கும் தீய பழக்கமாக இருந்தாலும், சித்திரையில் பிறந்தவர்களிடம் இந்த குணம் அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் வேலைகளை தாமதப்படுத்துவதையோ அல்லது அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பதையோ காணலாம். இது தேவையற்ற மன அழுத்தம் மற்றும் தவறவிட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்துவதற்கு வழிவகுக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி சித்திரையில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களும் தீய குணங்களும் இருக்கவே செய்யும். எனவே நல்ல விஷயங்களை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டும், தீ விஷயங்களை முடிந்தவரை தவிர்க்கவும் முடிவெடுத்தால், நிச்சயம் வாழ்வில் நல்ல நிலையை அடையலாம். இருப்பினும், ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயங்கள் அவர்களின் அனுபவங்கள் மற்றும் வளர்ப்பு உட்பட்ட காரணிகளால் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.