சுகாதாரத் துறையில் Wearable Technology-களின் ஆற்றல் என்ன தெரியுமா? உலகமே மாறப்போகுது! 

wearable technology in healthcare
wearable technology in healthcare
Published on

சமீப காலமாகவே அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஸ்மார்ட் வாட்ச்கள், பிட்னஸ் டிராகர்கள், பயோ சென்சார்கள், ஸ்மார்ட் ஆடைகள் என முற்றிலும் புதுமையான தொழில்நுட்ப சாதனங்கள், நமது ஆரோக்கியத்தைக் கண்காணித்து நிர்வகிப்பதில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்பதிவில் இத்தகைய அணியக்கூடிய சாதனங்களால், சுகாதாரத் துறையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பது பற்றி பார்க்கலாம். 

தனிநபர் பாதுகாப்பு: அணியக்கூடிய சாதனங்களானது ஒரு தனிநபரின் உடனடி உடல் சார்ந்த தரவுகளைத் தருவதால், அவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, தினசரி செயல்பாட்டின் அளவுகள், இதயத்துடிப்பு, தூக்கமுறைகள், ரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு போன்ற அனைத்தையுமே கண்காணிக்கலாம். இதன் மூலமாக ஒரு தனிநபர் தங்களைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொண்டு, எதுபோன்ற ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றலாம் என்ற முடிவை அவர்களே எடுக்க முடியும். 

தொலைதூர நோயாளி கண்காணிப்பு: அணியக்கூடிய தொழில்நுட்பம், தொலைதூரத்தில் இருக்கும் நோயாளியை மருத்துவர்கள் எளிதாகக் கண்காணிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. நோயாளிகளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழலில், தூரத்திலிருந்து அவர்களது உடல் நலம் சார்ந்த தரவுகளை சுகாதார வல்லுநர்கள் பார்க்கலாம். இது நாள்பட்ட உடல்நல பாதிப்புகள், முதியவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் உள்ள நோயாளிகளுக்கு சிறந்ததாகப் பார்க்கப்படுகிறது. தரவுகளைத் தொடர்ந்து சேகரித்து மருத்துவர்களுக்கு அனுப்புவதன் மூலம், உடல்நல பிரச்சனையை முன் கூட்டியே கண்டறிந்து அதற்கான தகுந்த சிகிச்சை எடுப்பது எளிதாகிறது. 

நோய் மேலாண்மை: நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பதில், அணியக்கூடிய சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு நபருக்கு தொடர்ச்சியாக குளுக்கோஸ் அளவு கண்காணிக்கப்பட வேண்டும் என்றால், இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தி நாம் எளிதாகக் கண்காணிக்க முடியும். இது அவர்களின் இன்சுலின் அளவு மற்றும் உணவுத் தேர்வு குறித்த முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் முன்னேற ஏன் போராட்டம் தேவைப்படுகிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
wearable technology in healthcare

நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்: அணியக்கூடிய தொழில்நுட்பமானது உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாகக் கண்காணிப்பதால், ஏதேனும் நோய் சார்ந்த முக்கிய அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க பெரிதளவில் உதவும். எனவே உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, மருத்துவர்களின் வேலையை எளிதாக்குகிறது இத்தகைய சாதனங்கள். இதன் மூலமாக ஒருவரின் சுகாதார செலவுகள் பெரிதளவில் குறைக்கப்படுகின்றன. 

இப்படி சுகாதாரத் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வரவிருக்கும் இத்தகைய அணியக்கூடிய சாதனங்கள், எதிர்காலத்தில் மேலும் பலவிதமாக உருமாறும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலமாக உலகெங்கிலும் உள்ள நபர்கள் ஆரோக்கியமான சூழலை எப்போதும் அமைத்துக் கொள்ள வழிவகுக்கும் என நம்புவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com