

கையெழுத்து அழகாக இருப்பது வெறும் அலங்காரம் அல்ல; அது மதிப்பெண்களையும், வாழ்க்கை வாய்ப்புகளையும் உயர்த்தும் கருவி என எழுத்தாளர் சொல்கிறார். graphology வழியாக எழுத்தின் திசை, இடைவெளி, அழுத்தம், வடிவம் போன்றவற்றை ஆராய்ந்து, மனிதர்களின் உணர்ச்சி ஆழம், நடைமுறை சிந்தனை, தனிமை விருப்பம், புரட்சிச் சிந்தனை போன்ற பல அம்சங்களை அறியலாம் என இந்த கட்டுரை வலியுறுத்துகிறது.
ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை பலவிதங்களில் கண்டு பிடிக்கலாம். உதாரணத்திற்கு முகத்தை வைத்து குரலை வைத்து ஒருவரின் குணத்தை கண்டுப் பிடிக்கிறார்கள். முகம் வேண்டாம், குரல் வேண்டாம், ஒருவர் கையெழுத்தை வைத்து அவர் அப்படி இப்படி என்று யூகித்துவிடலாம். கையெழுத்தை பார்த்தே அதை எழுதியவரின் சுபாவங்களை பிட்டு பிட்டு வைப்பது எப்படி என்று விளக்கும் கலைதான் graphology என்று அழைக்கபடுகிறது.
இந்த கலையின் வழிகாட்டல் படி நாம் ஒரு மனிதரை துல்லியமாக எடை போட்டு விடலாம் . அது எப்படி என்று பார்ப்போமா?
பெரிது பெரிதாக அதாவது எழுத்துக்களை கொட்டை கொட்டையாக எழுதுபவர்கள் பிரீயாக நடப்பவர்களாகவும் தன்னை நோக்கி மற்றவர் கவனங்களை கவருபவர்களாகவும் இருப்பார்கள். குட்டி குட்டியாக எறும்பு ஊர்வதுபோல எழுதுபவர்கள் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும், தற்குறிகளாகவும், அதே சமயத்தில் வெட்கி பதுங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
எழுத்துக்கள் சராசரியாக இருப்பின் அவர்கள் ஒத்துப்போபவர்களாக இருப்பார்கள். இப்போது எழுத்துக்களை சாய்த்து எழுதுபவர்களை பற்றி பார்ப்போம். வலது பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் எதையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்து எழுதுபவர்கள். புதுப் புது அனுபவங்களை வரவேற்க இவர்கள் தயங்க மாட்டார்கள்
இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் அதிகம் பேசாத reserved டைப். திரைமறைவில் எதையும் செய்பவர்கள். இவர்கள் லெப்டிஸ்ட் சிந்தனை கொண்ட புரட்சியாளர்களும் கூட. எந்த விதமான சாய்வும் இன்றி நேராக எழுதுபவர்கள் நடைமுறைக்கும் தர்கரீதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உணர்ச்சி வசத்துக்கு படியாதவர்கள்.
மேல்நோக்கி எழுதினால் ஊக்கம் நல்லதே நடக்கும் என்ற எதிர் நோக்கும் எதிலும் முன்னேற வேண்டும் என்ற உத்வேகமும் கொண்டவர்கள். கீழ் நோக்கி எழுதினால் அவர்கள் கெட்டதே நடக்கும் என்று அஞ்சுபவர்கள். இவர்களை எளிதாக discourage செய்து விடலாம்
எழுத்துக்களுக்கு மற்றும் வரிகளுக்கு இடையே அதிக இடைவெளி விட்டு எழுதுபவர்கள் சுதந்திர நோக்கும், ஒருத்தருக்கு ஒருத்தர் இடைவெளி விட்டு நடக்க வேண்டும் அதாவது personal Space க்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பர். மிகவும் குறைந்த இடைவெளி விட்டு எழுதுபவர்கள் தனிமையை விரும்பாதவர்களாகவும் எல்லோருடனும் ஒட்டியிருக்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
அழுத்தி எழுதுபவர்கள் யார் தெரியுமா? மிகவும் உணர்ச்சி மயமானவர்களும், ஆழமான சிந்தனையாளர்களும் தான். லேசாக எழுதுபவர்கள் sensitive வானவர்களும், சக்தி அதாவது energy இல்லாதவர்களாகவும் இருப்பர். உருண்டையாக அதாவது rounded letter களில் எழுத்துபவர்கள் மிகவும் நட்பு மனப்பாங்கு கொண்டவர்கள். ஒருத்தர் தொடர்ச்சியாக ஒரே மாதிரி எழுதினால் (Consistency)அவர் கட்டுப்பாடு மிக்கவராகவும் மாரி மாரி எழுதுபவர்கள் குழப்பவாதிகளாகவும் இருப்பார்களாம். இதற்கெல்லாம் மேல் கை எழுத்தை வைத்து மனநலம் மற்றும் உடல் நலம் பற்றிய உண்மைகளை அறியலாம் என்றும் சொல்கிறார்கள்.
உங்கள் கையெழுத்தின் வடிவம், சாய்வு மற்றும் அழுத்தம் உங்கள் மனோபாவத்தையும் திறமையையும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதை நேர்மறையாக மாற்றிக்கொள்ள வழிகாட்டும்.