
சந்தோஷம் இல்லத்திலும் இல்லை, உள்ளத்திலும் இல்லை, ஆடுமாடுகள் கூட சந்தோஷமாக உள்ளது. நம்மிடம் அது தொலைந்துபோனதே! கூலி வேலை செய்பவன் கூட சந்தோஷமாக வாழ்கிறான். பணக்காரன் பணத்தில் மிதக்கிறான். அங்கெல்லாம் சந்தோஷம் குறையவே இல்லையே!
அது ஏன் நம்மிடம்குறைவாக உள்ளது. நமது கற்பனைக்குஅளவே இல்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை.
அவை இரண்டையும், நமது மனம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சந்தோஷம் ஆரோக்கியம் நிலைத்திருக்க உபாயம் நம்மிடமே உள்ளது.
பம்பரக்கயறு நம்கையில் அதில் நமது கவனமும் நிதானமும் கலந்து செயல் படவேண்டும். அப்போதுதான் பம்பரம் சுத்தும் .
அனைவரிடமும் அன்பு செலுத்திப்பாருங்கள். சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
எதிலும் எந்த விஷயத்திலும் கோபத்தை தவிா்த்துப் பாருங்கள் சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும். யாருடைய வளா்ச்சியைக்கண்டும் பொறாமையைத் தவிா்த்துப்பாருங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்துங்கள், சந்தோஷம்நம்மிடமே நிலைத்திருக்கும்.
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பு செலுத்துங்கள், சந்தோஷம்நம்மிடமே நிலைத்திருக்கும்.
சில சுயநல நபர்களின் குணத்தை ஒதுக்கிவையுங்கள் அவர்களை ஒதுக்காதீா்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
அடுத்தவர் இயலாமையை, பலவீனத்தை, பயன்படுத்தாதீா்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
மனைவி மக்களிடம் அன்பு பாராட்டுங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும். வஞ்சகம், குரோதம், தொலைத்திடுங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும். உறவுகளோடு அன்பு பாராட்டுங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
செய்நன்றி மறவாதிருங்கள், சந்தோஷம்நம்மிடமே,
நிலைத்திருக்கும். மாற்றான் தோட்டத்தின் மல்லிகைக்கும் மனம் உன்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள், சந்தோஷம்நம்மிடமே நிலைத்திருக்கும்.
இயன்றதை இயலாதவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள், அப்போது சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
காலை எழுந்தவுடன் இன்றைய பொழுதில் அனைவரும் நலமாக இருக்க இறைவனிடம் பிராா்த்தணை செய்யுங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
பொியவர்களுக்கு உாிய மரியாதையை கொடுத்துப்பாருங்கள், சந்தோஷம் நம்மிடம் நிலைத்திருக்கும்.
அடுத்தவர் வீழ்ச்சியில் சந்தோஷம் தவிருங்கள், சந்தோஷம் நம்மிடம் நிலைத்திருக்கும்.
மனைவியை மந்திாிபோல பாவியுங்கள் சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும். தோளுக்குயர்ந்த மகனை தோழனாக நடத்துங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
மருமகளை மகளாக நேசித்து மதிப்பளியுங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும்.
எங்கும் எதிலும் நிதானம் கடைபிடியுங்கள், சந்தோஷம் நம்மிடமே நிலைத்திருக்கும். இவைகள் தவிர இன்னும் பட்டியல் போடலாம் சந்தோஷம் தானாக வருவதில்லை. நமது செயல்பாடுகளில் இருந்தே வருகிறது என்ற விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்!