மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை... அது நிகழ்காலம்!

Lifestyle story...
happy moments...Image credit - pixabay
Published on

ரு பணக்கார பெண் ஒரு வாழ்வியல் பேச்சாளரிடம் , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே. என் மகிழ்ச்சிற்கு வழி சொல்லுங்கள் என்றாள். அவர் உடனே அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், "நான் இப்பொழுது அலுவலக பணிப்பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன். நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள்" என்றார். பணிப் பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டுவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்லத் தொடங்கினாள்..

"என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை, எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரிக்க முடியவில்லை.

என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துக் கொண்டு இருந்தது, எனக்கு பூனையைப் பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வரச்செய்தேன்.

மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்துவிட்டு என் கால்களை அழகாக வருடிக் கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு உதவி என்னை மகிழ்ச்சியளிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து என் மனநிலையை மாற்றிக் கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்தவீட்டு நபருக்கு சாப்பிட சாப்பாடு கொடுத்தேன்.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழவைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெருமகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம். மகிழ்ச்சி என்பது, அதை மற்றவர்க்கு கொடுப்பதில்தான் இருக்கிறது என்பதை கண்டுக் கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்!
Lifestyle story...

"இதைக் கேட்ட அந்த பணக்காரப் பெண்  கதறி அழுதாள். எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் மகிழ்ச்சி, அது அவளிடம்இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீா்கள் என்பதில் இல்லை. உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி ஆகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது.

மகிழ்ச்சி என்பது போய் சேரும் இடம் அல்ல. அது அற்புத ஒரு பயணம். மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை. அது நிகழ்காலம். மகிழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்வது அல்ல. அது ஒரு முடிவு.

நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை மகிழ்ச்சி. நீங்கள் யார் என்பதில்தான் மகிழ்ச்சி. மகிழ வைத்து மகிழுங்கள். உலகமும் இறையும் உங்களை கண்டு மகிழும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com