
இன்று ஆசிரியர்கள் தினம். தன்னிடம் பயில வரும் மாணவர்களின் அறிவு வளரவும், அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமையவும், ஆசிரியர்கள் தங்களின் ஆயுள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது. ஆசிரியர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடம் நம்மை நம் வாழ்நாள் முழுக்க வழி நடத்திச்செல்ல உதவும். இன்றைய தினம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது ஆசான்களை மனதிற்குள் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியம்.
இந்த நன்னாளில் அறிஞர்கள் பலர் ஆசிரியர்கள் பற்றி கூறியுள்ள பொன் மொழிகள் சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையவும், நல்ல குடிமக்கள் நிறைந்திருக்கவும், சமூக அக்கறையுள்ள அம்மா, அப்பா மற்றும் ஆசிரியர் ஆகிய இந்த மூன்று நபர்களால் மட்டுமே உதவ முடியும். நல்லதொரு மாற்றத்தை உருவாக்க இவர்களால் நிச்சயம் முடியும். - டாக்டர் APJ Abdul Kalam.
ஒரு ஆசிரியரின் ஆளுமை முடிவில்லாதது. அது எங்கு முடியும் என்பதை அவராலேயே கூற முடியாது. - ஹென்றி ஆடம்ஸ்.
ஒரு நல்ல ஆசிரியர் மெழுகுவர்த்தி போன்றவர். தன்னை உருக்கி பிறர் வாழ்வு ஒளிமயமாக உழைப்பவர். - Mustafa Kemal Ataturk.
படைப்புத் தறன் மற்றும் அறிவாற்றல் கொடுத்து தன் மாணவனை சந்தோஷமடையச் செய்வது ஒரு ஆசிரியருக்குள் உள்ள உயர்ந்த கலைத் திறன் ஆகும். - Albert Einstein.
ஒரு ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை விட அந்த ஆசிரியர் மிக முக்கியமானவர். - Kari Menninger.
கல்வி என்பது இந்த உலகத்தையே புரட்டிப்போடும் அளவுக்கு சக்தி தரக்கூடிய ஒரு பலமான ஆயுதம். - Nelson Mandela.
ஒரு சாதாரண ஆசிரியர் கூறுகிறார்: "ஒரு நல்ல ஆசிரியர் விளக்கிக் கூறுவார். ஒரு சிறப்பான ஆசிரியர் செயல்முறையில் விளக்கிக் காட்டுவார். ஒரு கிரேட் டீச்சர் ஊக்கம் அளிப்பார்." - William Arthur Ward.
கற்பித்தல் என்பது இரண்டு முறை கற்றுக்கொள்ளுதல். - Joseph Joubert.
தனது தனிப்பட்ட செல்வாக்கு தன் மாணவர்களிடையே உண்டு பண்ணும் தாக்கத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுபவரே ஒரு சிறந்த ஆசிரியராவார். - Amos Bronson Alcott.
1பாடங்களை புத்தகத்திலிருந்து கற்றுக்கொடுக்காமல் தன் இதயத்திலிருந்து கற்றுக் கொடுப்பவரே சிறந்த ஆசிரியர். - William Arthur Ward.
கற்பித்தலை விரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள் கற்றுக்கொள்வதை விரும்பும்படி கற்றுக் கொடுப்பார்கள். - Robert John Meehan.
உயர் கல்வி பெறுவதென்பது கல்வியறிவு மட்டுமல்லாது சக உயிரினங்கள் அனைத்துடனும் ஓர் இணக்கமான வாழ்வியல் முறையை பின்பற்றி வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதேயாகும். - Rabindranath Tagore.
நமது வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு உழைத்த அத்தனை நல்லாசிரியர்களையும் இன்று தவறாமல் நினைவில் நிறுத்தி நன்றி கூறுவோம்.