
தினம் தினம் அதிகாலை எழும்பொழுது நாம் புதிதாய் பிறக்கிறோம். அந்த நாளில் நாம் எப்படி இருக்க போகிறோம் என்பது அன்று எடுக்கும் முடிவுகளை பொறுத்தது. அதற்கு சில தீர்மானங்கள் எடுப்போம்.
இந்த அதிகாலையில் நான் விழிக்கிறேன். இன்று இரவு வரை நான் அனுபவிக்க ஒரு மகத்தான புதிய நாள் கிடைத்துள்ளது.
நான் செய்யவேண்டிய முக்கியமான கடமைகள் உள்ளன. அவற்றில் நான் எப்படி செய்யப் போகிறேன் என்பதை பொறுத்து இந்த நாள் எனக்கு இனியதாக அமையும் என்பதை நினைத்து தீர்மானிக்கவும்.
என்னிடம் போதுமான பணம் இல்லையே என்ன சோகத்தில் மூழ்காமல், இருக்கும் பணத்தில் எனக்குத் தேவையானதை மட்டும் வாங்கி சிக்கனமாக இருப்பது எப்படி? எனக் கற்றுக்கொண்டேன் என்று ஆறுதல் அடையலாம்.
என் உடல்நிலை நன்றாக இல்லையே என்னை விரட்டி அடையாமல் இந்த சூழலில் வேலைகளை இயல்பாக செய்யும் மனஉறுதி எனக்கு இருக்கிறது என ஆறுதல் அடையலாம்.
எனக்கு உதவி செய்ய நல்ல நண்பர்கள் இல்லையே? என சோகத்தில் மூழ்காமல் புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது என மகிழ்ச்சி அடையலாம்.
இன்றும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டி இருக்கிறேதே? என புலம்பாமல் எத்தனையோ பேர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள், எனக்கு செய்வதற்கு ஒரு வேலை இருக்கிறது என்ன உற்சாகமாக மனதில் சொல்லலாம்.
காலை முதல் இரவு வரை வீட்டில் எவ்வளவோ வேலைகள் செய்ய வேண்டியுள்ளேதே என்று எரிச்சல் கொள்ளாமல் எனக்கே எனக்கு என்று ஒரு வீடு இருக்கிறது அதை நாம் பராமரிக்கிறோம் என மனதில் பெருமை அடையலாம்.
ஆபீஸில், தொழிலில் வியாபாரத்தில் எனக்கு புதுப்புது வேலைகள் கொடுக்கிறார்களே? என்று குழப்பம் அடையாமல் இன்று புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று மனதில் உற்சாகம் அடையலாம்.
இளம் வயதிலிருந்து நான் விரும்பிய பல விஷயங்களை தராத பெற்றோர்களை நினைத்து கோபம் கொள்ளாமல், தங்களால் இயன்றதை செய்து அவர்கள் என்னை இப்படி வளர்த்தார்கேளே என நன்றியுடன் மனதில் நினைக்கலாம்.
தினம் தினம் இவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளேதே? என துன்பத்தில் தவிக்காமல் ஒவ்வொரு பயணமும் ஒரு புது அனுபவத்தை தருகிறது என மனதில் உற்சாகம் அடையலாம்.
நாம் எப்படி ஒவ்வொரு செயலையும் நிகழ்வையும் பார்க்கிறோம் என்பதில்தான் நமக்கு மகிழ்ச்சியோ எரிச்சலோ கிடைக்கிறது. இந்த நாளில் எல்லாவற்றையும் நான் நேர்மறையாகவே அணுகுவேன். இன்னும் உருவாக்கப்படாத வார்த்தை ஒரு சிற்பம்போல இந்த நாள் எனக்காக காத்திருக்கிறது! ஒரு தேர்ந்த சிற்பி போல ஒவ்வொரு நிமிடத்தையும் நான் செதுக்கி இந்த நாளை இனிய நாளாக ஆக்குவேன் என உறுதி எடுத்தால் ஒவ்வொரு நாளும் இனிய நாளே!