கடின உழைப்பே அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது!

 Chances of success
hard work.Image credit - pixabay
Published on

டின உழைப்பு அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது. உருவாக்குகிறது. உடன் வைத்துக் கொள்கிறது. உலகில் வாழும் அனைவருக்கும் எதோ ஒரு விதத்தில் வெற்றி வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வாய்ப்புகள் எந்த வடிவத்தில், எந்த நேரத்தில்  வருகிறது என்பது மறைந்திருந்திருப்பதே  அதன் தனிச்சிறப்பு. பலர் வெற்றிக்கான வாய்ப்பைக் கண்டுகொள்வதில்லை. ஒரு சிலரே அதை பயன்படுத்திக் கொண்டு வெற்றியாளராக ஆகிறார்கள்.

அந்த ஒரு சிலரையே சமுதாயம் அதிர்ஷ்டம் பெற்றவர்களாக  கருதுகிறது. வியந்து பாராட்டுகிறது. அவர்கள் வேறு யாருமில்லை. கடின உழைப்பாளர்கள் தான் அவர்கள். வாய்ப்புகளை கண்டுணர்வது முக்கியம்.  அதைவிட முக்கியம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திறமைகளை உபயோகித்து, நேரத்தைக் கணக்கிட்டு, விடாமுயற்சியுடன் வெற்றிக்காக உழைப்பது. கடினமான உழைப்பாளர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை.  எதை, எப்படி ஏன்  செய்யவேண்டும் என்பதை உணர்ந்தவர்களே  வெற்றி பெற்று அதிர்ஷ்டசாலியாகின்றனர்.

யாரும் எப்போதும் அதிர்ஷ்டசாலியாகத் திகழ முடியாது.  எல்லோரும் தோல்விகளை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். கடுமையாக உழைக்கும்போது தோல்விகள் வெற்றிக்கான பாதையாக மாறுகின்றன. உயர்ந்த எண்ணம் மனதில் எழுவது அதிர்ஷ்டம். அந்த எண்ணத்தை நோக்கி விடாப்பிடியாக உழைப்பது அதிர்ஷ்டம்.  உழைப்பின்போது உறுதியாக இருப்பது அதிர்ஷ்டம். தோல்விகளையும், எதிர்ப்புகளையும், இடர்களையும் கண்டு துவளாமல்  முன் செல்வது அதிர்ஷ்டம்.இலக்கு நோக்கிய பயணத்தில் மகிழ்வதும் அதிர்ஷ்டமே.

இதையும் படியுங்கள்:
வெற்றி என்பது முதல் முயற்சியிலேயே கிடைப்பதில்லை!
 Chances of success

மனித சமுதாயத்தில் பிணிகளைப் போக்கக்கூடிய அரு மருந்து  உழைப்பு. பலர் விதியை நம்பி உழைக்காமலையே காலம் தள்ளுகின்றனர். விதி அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று தவறாக எண்ணுகிறார்கள்.

உழைத்தாலும் விதியின் உதவி இல்லை என்றால் காரியம் கைகூடாது என்று எண்ணி, "என்னதான் நான் உழைத்தாலும், அது நடக்க வேண்டிய நாளில்தான் நடக்கும்" என்று கூறி உழைக்கவே தவறுகின்றனர். விதியை மாற்ற உழைப்பால் கண்டிப்பாக முடியும். உழைக்காதவர் கெடுப்பார் இல்லாமலேயே தானே கெட்டு விடுவர். அத்தகையோர்க்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை என்று உலகம் கூறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com