வெற்றி என்பது முதல் முயற்சியிலேயே கிடைப்பதில்லை!

Try to success...
Success is...Image credit - pixabay
Published on

ந்த ஒரு காரியத்திலும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் மிக மிகக் குறைவு ஏனென்றால் முதல் முயற்சி ஒரு படியாகத்தான் இருக்கும். ஏனென்றால். குழந்தை எழுந்து நடக்கும் பொழுது கைவீசி நடப்பதில்லை அது கீழே விழுந்து பின் எழுந்து பிறகுதான் நடக்கிறது. 

வெற்றியும் அப்படித்தான் நாம் முதலில் அடியெடுத்து வைக்கும் பொழுது குழந்தை முதலில் நடப்பதுபோல விழுவோம். பிறகு அந்த குழந்தை ஏதேனும் ஒரு பொருளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். அதேபோல் நானும் வாழ்க்கையில் வெற்றிக்கான சூத்திரங்களை கற்றுக்கொண்டு மெல்ல மெல்ல வெற்றியை நெருங்கினால் வெற்றி நம் பின்னால் வரும்.

குறிப்பாக இந்த 6 விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால் வெற்றி தொடரும் என்ன 6 விஷயங்கள் இப்பதிவில் பார்ப்போம்

1-பணிவு: 

ஒரு துறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் நாலு விஷயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப்போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகப் பணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பார்கள்.

2-கருணை:

உங்களை சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும்போது அவர்களுக்கு ஆறுதலாய் இருந்து பாருங்கள். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உதவுவதற்கு ஓடி வருவார்கள்.

3-பழகும் தன்மை: 

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புதிதகமாக வாழத் தொடங்குகள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

4-அரவணைக்கும் குணம்: 

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

இதையும் படியுங்கள்:
எந்த சூழ்நிலையிலும் வெற்றிபெற வைக்கும் சமயோசித புத்தி!
Try to success...

5-இணைந்து பணியாற்றும் தன்மை:

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

6-முடிவெடுக்கும் திறன்: 

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும். இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.

இவையே வாழ்க்கையின் வெற்றியின் ஆறு பக்கங்கள் என்றால் இப்போதே அதை சரியாகச் செதுக்கி வெற்றிபெற முயற்சி எடுத்துக் கொள்ளலாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com