இமயமலை போன்ற இதய உறுதி கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!

motivation article
motivation articleImage credit - pixabay

சாய்ந்து கொள்ள ஒரு தோள் என்பது, இன்றைக்கு  எல்லோருக்கும் உள்ள எதிர்பார்ப்பு. இது ஒருவகை மனநோய். இந்த பலவீனத்தைதான் . ஜோதிடர்கள் சாமியார்கள் வசமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் மூளையை அடகு வைத்துவிட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பிறர் வசம் விட்டவர்கள்.

புத்தர் உலகை உலுக்கிய மனிதருள் ஒருவர். அவர் யாரைக் கேட்டுத் துறவறம் பூண்டார். சிலர் தங்களின் உறவுக்காரர்களின் பெயரைச். சொல்லி "அவர் என்னை கைதூக்கிவிட்டிருக்கலாம். ஆனால் செய்யமாட்டார்" என்று திட்டுவார்கள். சிலர் பிறரிடமிருந்து எதிர் பார்த்துக்கொண்டே இருப்பர். இத்தகைய மனஊனங்கள் மாற வேண்டியவை. இதற்கு நேர்மாறாக இருந்தவர்களும் உண்டு.

பாரதியார் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரர் அவருக்குப் பத்து முழம் வேட்டி வாங்கிக் கொடுத்தார். புது வேஷ்டி  துண்டோடு தெருவில் இறங்கியவர். குளிரில் நடுங்கிய ஏழையைப் பார்த்ததும் உள்ளம் நடுங்கியது. இடுப்பு வேட்டியைக்கழட்டி ஏழைக்குக் கொடுத்துவிட்டு மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு வீடு திரும்பினார். மேல் துண்டைக் கொடுத்தால் போதாதா என்று ஒருவர் கேட்டதற்கு அதெப்படி அவன் வெளியே இருக்கிறான் குளிராதா? வீட்டுக்குள்ளே இருக்கும் எனக்கு  இது போதாதா என்றார் வள்ளல் மகாகவி பாரதி. அவரா ஏழை. அவர் கவியரசர் அல்லவா?

வாழ்வில் புகழ்பெற்ற மிக உயர்ந்த பெருமக்களை ஊன்றி கவனியுங்கள். தோள் கொடுத்துத் தாங்‌கத் தயார்.  சாயத் தோள் வேண்டியதில்லை என்பதே அவர்கள் அறிவிப்பு. ஏசுபிரான் அப்படித்தானே உலகோரைத் தன் நிழலில் இளைப்பாற அழைப்பு விடுத்தார். ஓரு ஏழை இளைஞன். விலையுயர்ந்த காலணிகள் வாங்கியிருந்தார் ரயிலில் போகும்போது அதன் அழகை. ரசித்துக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே ஒரு காலணி விழுந்துவிட்டது. வருத்தம் அடைந்த அவன் அடுத்த வினாடியே இன்னொரு செருப்பையும் வெளியே வீசினான். அங்கிருந்தவர்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்றனர்  அதற்கு அவன் ஒற்றைச்செருப்பினால் எனக்குப் பயன் இல்லை. எடுக்கிறவனாவது அதை எடுத்து சந்தோஷப்படட்டும என்றான்.

சென்னையில் ஒரு குப்பத்தில் தீ பிடித்துக் கொண்டது. அப்போது ஒரு பெண்மணி தன் வீடடிலிருந்த பொருட்களை எடுக்காமல் பக்கத்து வீட்டை உடைத்து நிறைய பொருட்களைக் காப்பாற்றினாள். ஏன் இப்படிச் செய்தாய் என காரணம் கேட்க, அந்த வீட்டில் திருமணத்திற்காக பல விலையுயர்ந்த பொருட்கள் வாங்கி வைத்திருந்தார்கள். அவை எரிந்தால் கல்யாணம் கூட நிற்கலாம். அதனால் அவர்கள் பொருட்களை.  மீட்டேன் என்றாராம். அவரது தியாக தீரம் வெற்றிக்கான விதை. எப்போதும் ஏதாவது துக்கத்தையும் துயரத்தையும் மூட்டை கட்டிக் கொண்டு யார் மீது இறக்கலாம் என்ற சுயபச்சாதாபத்தை விட்டு வெளியேறுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
motivation article

பலரை உயர்த்தும் பலம் நம்முள் இருக்கிறது என்பதை உணருங்கள். திருமணமே செய்து கொள்ளாத வித்யாசாகர் ஆதரவற்ற அனைவரையும் ஆதரிக்கும்  உதவும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனம் நடத்துகிறார் தெரியுமா?. குழந்தை பெறாக மதர்தெரஸா எல்லோருக்கும் மதர்தெரசா ஆனார். சாய்வதற்கு தோள் தேடுபவர்கள் சாய்ந்தே போகிறார்கள். 

கம்பீரமாக இமயமலைபோல் இருப்பவர்கள் காலம் கடந்தும் வாழ்கிறார்கள். இமயமலைபோல் இதய உறுதி கொள்ளுங்கள். சாய் வதற்கு தோள் தேடாதீர்கள் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com