Helen Keller Quotes: ஹெலன் கெல்லர் கூறிய 15 வாழ்க்கைத் தத்துவங்கள்!

Helen Keller
Helen Keller
Published on

1880 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன், 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார். 'வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்' என்று கூறுவார்கள். அத்தகைய பொன்மொழியை மாற்றி, தான் பேசாமல், தன்னைப் பற்றி அனைவரையும் பேச வைத்தார் ஹெலன். மோசமான வாழ்க்கைப் பாதையில் பயணிப்பவர்களே, வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துக்கொள்வார்களாம்.

அப்படி வாழ்க்கைப் பற்றிப் புரிந்துக்கொண்ட ஹெலன், பல தத்துவங்களை இவ்வுலகிற்கு கூறிவிட்டு சென்றுள்ளார். அவற்றில் 15 பொன்மொழிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.  உலகின் சிறந்த மற்றும் அழகான விஷயங்களை பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது, அவை இதயத்தால் உணரப்பட வேண்டும்.

2.  ஒரு கதவு மூடப்படும்போது மற்றொன்று திறக்கும்; ஆனால் அடிக்கடி நாம் மூடிய கதவை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறக்கப்பட்டுள்ளதைக் காண முடியாமல் போகிறது.

3.   நாம் இழந்த வாய்ப்புகளை எண்ணி கவலைப்படுகிறோம். ஆனால், நாம் நன்றாக வளர்ந்து திறமைசாலியாகவும் புத்திசாலியாகவும் மாறும்போது, இழந்த வாய்ப்புகள் அனைத்தையும் ஒன்றுத்திரட்டி நமக்குக் கொடுப்பார்கள் தேவதைகள்.

4.  "நான் தேடுவது வெளியே இல்லை, அது என்னுள் இருக்கிறது." 

5.  "நாம் செய்ய விரும்பும் எதையும் நீண்ட நேரம் கடைப்பிடித்தால், அதனை எளிதில் செய்து முடித்துவிடலாம்." 

6.  "ஆபத்தைத் தவிர்ப்பது , நேரடியாக எதிர்ப்பதைவிட நீண்ட காலத்திற்கு பாதுகாப்பானது அல்ல. தைரியமானவர்களைப் போலவே பயப்படுபவர்களும் அடிக்கடி பிடிபடுகிறார்கள் 

7.  "அதைச் செய்ய முடியாது என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டிருக்கையில், அது முடிந்தே போய்விடுகிறது."

8.  "எல்லாவற்றிலும் அதன் அதிசயங்கள் உள்ளன. இருளும் மௌனமும் கூட , நான் எந்த நிலையில் இருந்தாலும், அதில் திருப்தியாக இருக்க கற்றுக்கொள்கிறேன்." 

9.  உலகில் அறிவின் பெரும்பகுதி என்பது, ஒரு கற்பனையான கட்டுமானம் ஆகும்.

10. சோதனை மற்றும் துன்பத்தின் அனுபவங்கள் மூலம் மட்டுமே ஆன்மா பலப்படுத்தப்படும், பார்வை தெளிவுபடுத்தப்படும். அதன்பிறகுதான் லட்சியம் ஈர்க்கப்பட்டு வெற்றியை அடைய முடியும்.

இதையும் படியுங்கள்:
Lenin Quotes: புரட்சியாளர் லெனினின் 15 புரட்சிகர தத்துவங்கள்!
Helen Keller

11. நம்பிக்கை என்பது சாதனைக்கு வழிவகுக்கும். நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது 

12. சாலையில் ஒரு வளைவு என்பது சாலையின் முடிவல்ல... நீங்கள் திரும்பத் தவறினால் ஒழிய.

13. ஏமாற்றம் மற்றும் தோல்வியின் போதும் தொடர்ந்து முயற்சி செய்வதே இளமையாகவும் தைரியமாகவும் இருக்க ஒரே வழி. நம்மை ஞானமுள்ளவர்களாக மாற்றினால் தோல்விகள் வெற்றிகளாக மாறும். 

14. உங்கள் தலை ஒருபோதும் குனிய வேண்டாம். அதை எப்போதும் உயரமாக வைத்திருங்கள். உலகத்தை நேருக்கு நேர் பாருங்கள்.

15. நாம் மிகவும் விரும்புகிற ஒன்றை, நம்மில் ஒரு பகுதியாக மாற்றிவிடுகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com