Lenin Quotes: புரட்சியாளர் லெனினின் 15 புரட்சிகர தத்துவங்கள்!

Lenin
Lenin

1870ம் ஆண்டு பிறந்த விளாடிமிர் லெனின் ஒரு உருசிய புரட்சியாளர் ஆவார். ரஷ்யாவில் இருந்துவந்த ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, சோவியத் ஆட்சி மலரக் காரணமாக இருந்தவர் லெனின். இவர் தான் படித்த சட்டங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தார். வாழ்வில் தான் கற்றுக்கொண்ட பாடங்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்தார். மக்களை அணி திரட்டும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கினார். அதற்காக, விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற ஓர் அமைப்பையும் 1895-ம் ஆண்டு தோற்றுவித்தார். 

அந்தவகையில் அவரின் புரட்சிகர பொன்மொழிகளைப் பார்ப்போம்.

1.  நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.

2.  பிழைகள் மற்றும் தோல்விகள்  இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.

3.  நம்பிக்கை நல்லதுதான். ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.

4.  தவறான சொல்லாடல் மற்றும் தவறான பெருமிதம் தார்மீக அழிவை உச்சரிக்கிறது. மேலும் இது அரசியல் அழிவுக்கும் வழிவகுக்கிறது.

5.  தோல்வியை ஒப்புக்கொள்ள பயப்படாதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மோசமாகச் செய்ததை இன்னும் முழுமையாகவும், கவனமாகவும், முறையாகவும் செய்யுங்கள்.

6.  அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.

7.  நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி.

8.  தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.

9.  பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.

10. உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அதே அரசியலால் ஆளப்படுவாய்.

11. அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.

12. எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால், வெற்றிபெற முடியாது.

இதையும் படியுங்கள்:
Che Guevara Quotes: உத்வேகம் தரும் சே குவேராவின் 15 பொன்மொழிகள்!
Lenin

13.  நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்தலாம். உலகம் உன்னைப் போற்றும். 

14.  புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள், புத்தகங்களே!

15. "மதவாதிகள் மனிதன் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைய வழி கூறுகிறார்கள். நாங்களோ இந்த பூமியில் சொர்க்கத்தை படைக்க வழி கூறுகிறோம்."

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com