Holi Motivation
Holi Motivation

Holi Motivation: ஹோலி பண்டிகை கற்றுத்தரும் 5 வாழ்க்கைப் பாடங்கள்! 

நாளை இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை மிக விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதன் வண்ணமயமான கலாச்சார முக்கியத்துவத்திற்கு அப்பால், நம்முடைய வாழ்க்கைக்கான சிறந்த பாடங்களையும் ஹோலி கற்றுத் தருகிறது என்னலாம். 

மேலோட்டமாக பார்க்கும்போது ஹோலி பண்டிகையன்று வண்ணப் பொடிகளை மேலே பூசிக் கொண்டாடுவார்கள் என்பதையும் தாண்டி, நாம் ஆழமாக சிந்திக்கக் கூடிய வாழ்க்கை பாடங்களையும் இது கற்றுத் தருகிறது. சரி வாருங்கள் இந்தப் பதிவில் ஹோலி பண்டிகை வாயிலாக எதுபோன்ற வாழ்க்கைப் பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்கு Room Freshener வாங்கப் போறீங்களா? இந்த 5 விஷயங்களில் கவனமா இருங்க!
Holi Motivation
  1. பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: ஹோலி பண்டிகை என்பது சாதி, மத, பேதம், அந்தஸ்து போன்றவற்றின் எல்லைகளைத் தாண்டி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகையாகும். இந்த பண்டிகை, ஒரு தனிநபர் எப்படி பன்முகத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என்பதனை நமக்குக் கற்பிக்கிறது. இப்படி இருப்பதால் ஒருவரது மனோபலம் மற்றும் திறமை வளரும். 

  2. தடைகளை உடையுங்கள்: ஹோலி பண்டிகையானது மக்களை சமூக விதிகள் மற்றும் தடைகளிலிருந்து விடுவித்து செயல்பட வைக்கிறது. அந்த தருணத்தில் மக்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மகிழ்ச்சியில் தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள். இப்படிதான் உண்மையான உந்துதல் என்பது, நீங்கள் சுயமாக போட்டுக் கொண்டிருக்கும் வரம்புகளிலிருந்து விடுபடுவது மூலமாகக் கிடைக்கிறது. 

  3. ஒற்றுமையாக இருங்கள்: ஹோலி மக்களை ஒன்றிணைக்கிறது, எல்லாவிதமான தடைகளையும் நீக்கி ஒற்றுமை மற்றும் தோழமையை வளர்கிறது. வாழ்க்கையில் உங்களால் எல்லா தருணங்களிலும் தனியாகவே இருந்துவிட முடியாது. நீங்கள் சில விஷயங்களை அடைவதற்கு கூட்டு முயற்சிகள் மிகவும் முக்கியம். இதை நீங்கள் உணர்வதன் மூலம், உங்கள் இலக்குகளை வேகமாக அடையும் சூழலை உருவாக்க முடியும். 

  4. விளையாட்டுத்தனம் முக்கியம்: ஹோலி என்பது சிரிப்பு, குறும்பு மற்றும் விளையாட்டுத்தனத்தின் திருவிழாவாகும். நாம் நம்முடைய வாழ்வில் விளையாட்டுத்தனத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மகிழ்ச்சியாக நாம் நமது இலக்குகளை அணுகும்போது, நேர்மறையான மனநிலையில் வெற்றிக்கான பயணம் சுவாரசியமாக அமைகிறது. 

  5. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்: ஆண்டு முழுவதும் சராசரியான வாழ்க்கையை வாழும் மக்கள், ஹோலி தினத்தன்று முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த மாற்றமே அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே நீங்களும் உங்கள் வாழ்வில் மாற்றங்களை நினைத்து பயப்பட வேண்டாம். மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறப்போகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com