அன்பு செலுத்துங்கள்…!

Motivation Image
Motivation Imagepixabay.com

ன்றைய அவசர உலகில் பலரும் அவரவர் வேலைகளை மட்டுமே கவனிக்கின்றனர். மற்றவர்களிடம் முகம் கொடுத்து அன்பாக பேசுவதென்பது இல்லை. இந்த உலகில் அன்புக்கு மட்டும்தான் சில தனிபட்ட தன்மைகள் இருக்கின்றன. அன்பு காட்டுவதன் மூலம் மனது இலேசாகுகிறது. எவ்வளவு இறுக்கமான சூழலையும் தளர்த்துகிறது. ஒருவரை முழுமையாக மாற்றும் தன்மை அன்புக்கு மட்டுமே உண்டு.

திரைப்படத்தில் யாரோ யாருக்கோ வெளிப்படுத்துகின்ற அன்பு உங்களை சந்தோஷப்படுத்துகிறது என்றால் நீங்கள் அடுத்தவர் மீது அன்புடன் நடந்து கொள்வதும் எவ்வளவு அழகானது என்று சிந்தித்து பாருங்கள்.

தான் கண்டிப்பானவர்கள் என்றுக் காட்டிக்கொள்ள பலர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வதுண்டு. தான் அன்பு காட்டினால் அதனை மற்றவர்கள் பலகீனமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பதுதான் நாம் பிறர் மீது அன்பு செலுத்தாமல் இருப்பதற்கு  காரணம்.

பிள்ளையிடம் அன்பு காட்டினால் அவர்கள் கெட்டுப்போவார்கள் என்று பல பெற்றோர்கள் நினைக்கின்றனர். மாணவனிடம் அன்பு காட்டினால் மரியாதை இருக்காது என்று நினைக்கும் ஆசிரியர்கள், கண்டிப்பாக இருந்தால்தான் வேலை நடக்கும் என்ற எண்ணத்தில் இருக்கும் முதலாளிகள், இவர்கள் அனைவரும் அன்பை வெளிக்காட்டுவதில்லை. ஆனால் இவர்கள் அன்பை வெளிக்காட்டினால்  இவர்களுக்கான மதிப்பு எண்ணில் அடங்காத அளவு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
கவலையை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது எப்படி?
Motivation Image

அன்பை வெளிப்படுத்தாமல் ஒருவர் இருந்தால் அது அவரின் பலவீனத்தையே காட்டுகிறது. அன்பாய் இருப்பதும், அன்பை வெளிப்படுத்துவதும்தான் மனிதனின் இயல்பு. உங்களிடம் அன்பு காட்ட இந்த உலகமே காத்திருக்கிறது. எத்தனை பேர் வீட்டில் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணியிடம் அன்பு காட்டுகின்றனர்? ஆனால் அதில் பாதி கூட பெற்றவரிடமும், மற்றவரிடமும் காட்டுவதில்வை.

மார்க்லூயிஸ் என்பவர் அன்பைபற்றி குறிக்கும்போது, நீங்கள் எது எதற்காகவெல்லாம் அன்பை வெளிப்படுத்த தயங்குகிறீர்களோ அது அத்தனையையும் விட அன்பு உயர்வானது என்று குறிப்பிடுகின்றார்.

-நித்தீஷ்குமார் யாழி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com