நம்முடைய முக்கியத்துவத்தை எப்படி மற்றவர்களுக்கு உணர்த்துவது?

Motivation Image
Motivation Imagepixabay.com

ம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் சில சமயங்களில் நம் வெற்றிக்கு அவசியமாகும். ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மற்றவர்களுக்கு எப்போது தோன்றுமெனில், அவரை பற்றி எதுவுமே கணிக்க முடியாத சமயத்திலேயேயாகும். நீங்களும் பிறரால் சுலபமாக கணிக்க முடியாதவராய் இருக்க வேண்டும் என்றால் உங்களை பற்றிய குறைவான தகவல்களை மட்டுமே வெளியிடுங்கள்.

நீங்கள் முக்கியமான நபராக கருதப்படுவதற்கு செய்ய வேண்டியவை,

முதலில் உங்களுடைய முக்கியத்துவத்தை நீங்களே உணர்ந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உங்களுடைய மதிப்பு என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் மற்றவர்களும் உங்களின் மதிப்பை உணருவார்கள்.

காதல் என்பது இருவர் சேர்ந்து பரிமாறிக்கொள்ளும் அன்பாகும். ஒருவர் மட்டுமே காதலுக்காக கெஞ்சுவது காதலாகாது. பிறகு கடைசி வரை காதலை கேட்டு வாங்க வேண்டிய நிலையிலேயே இருக்க வேண்டும்.

நச்சுத்தன்மை வாய்ந்த உறவுகள், நச்சுத்தன்மை வாய்ந்த மக்கள், நச்சுத்தன்மை வாய்ந்த காதல் போன்றவற்றை விட்டு விலகி வருவது நல்லதாகும்.

காதலுக்காகவோ அல்லது அன்பிற்காகவோ உங்களை மோசமாக நடத்த அனுமதித்து விட்டு பிறகு அவர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று நினைப்பது நடக்காத காரியமாகும்.

எல்லோரிடமும் நல்லவராகவே இருப்பது தவறாகும். சிலர் நல்ல உள்ளம் கொண்டவர்களையே பகடைக்காயாக பயன்படுத்த கூடியவர்கள். எனவே நல்லவர்களிடம் நல்லவராகவும், கெட்டவர்களிடம் கெட்டவராகவும் நடந்து கொள்வதில் தவறில்லை.

உங்களை மதிக்காதவரை நீங்களும் மதிக்க தேவையில்லை. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு ஔவையார் சொன்னதுபோல, மரியாதை கிடைக்காத இடத்தில் வேறு எதையும் எதிர்ப்பார்த்து நிற்க வேண்டாம்.

உங்களுக்குள் இடைவெளியை உருவாக்குங்கள். உங்களுக்கு பிடித்த நபருடன் 24 மணி நேரமும் இருப்பீர்களானால், உங்களின் பிரிவின் ஏக்கத்தை அவரால் எப்படி உணர்ந்துக்கொள்ள முடியும். உங்களின் முக்கியத்துவத்தை இடைவெளி மூலம் உணர்த்துங்கள்.

அடுத்தவக்களை மகிழ்ச்சியாக வைத்துகொள்ள வேண்டும் என்ற காரணத்தால் உங்களை காயப்படுத்தி கொள்ளாதீர்கள். உங்களின் மகிழ்ச்சிக்கே எப்போதும் முன்னுரிமை தர வேண்டியது அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோயை தடுக்கும் ஆரோக்கிய இயற்கை உணவுகள்!
Motivation Image

எந்த பதில் தர வேண்டுமானாலும் தெளிவாக இருக்க வேண்டும். ‘ஆமாம்’ என்றால் ஆமாம். ‘இல்லை’என்றால் இல்லை. இதற்கு நடுவில், ‘அப்பறம் பார்த்துக் கொள்ளலாம், பிறகு சொல்கிறேன்’ போன்ற பதில்கள் தரக்கூடாது.

உங்களிடம் பேச வேண்டும், உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு முக்கியத்துவம் தர ஆயிரம் பேர் இருக்கையில், ஏன் உங்களை மதிக்காத அந்த ஒருவரை நினைத்து வருத்தப்பட வேண்டும்.

தவறு செய்து மன்னிப்பு கேட்பதும் அதற்காக மன்னிப்பதும் சாதாரண விஷயமாக இருந்தாலும். ‘மன்னிப்பு’ என்ற வார்த்தைக்கும் மதிப்பு இருக்கிறது. சுலபமாக மற்றவர்கள் செய்யும் தவறை மன்னித்து கொண்டேயிருந்தால், பின்பு நம்மை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com