
நம்ம வாழ்க்கையில புதுசா ஒருத்தரைப் பார்க்கும் போது, அவங்க சொல்றத அப்படியே நம்பிடுவோம். ஆனா, பல சமயங்கள்ல இதுவே நமக்கு பிரச்சனையாகவும் முடியும். எனவே யார் உண்மை பேசுறாங்க, யார் பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். அந்த வகையில பொய் பேசுறவங்களை எப்படி கண்டுபிடிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.
1. முக பாவனைகள்: பொய் பேசுறவங்க வெறும் வாயால மட்டும் சிரிப்பாங்க. அவங்க சிரிப்பு செயற்கையா இருக்கும். அவங்க சொல்ற வார்த்தைகளுக்கும், அவங்க முகத்துல இருக்கிற உணர்ச்சிக்கும் சம்பந்தமே இருக்காது. உதாரணத்துக்கு, "உனக்காக நான் சந்தோஷமா இருக்கேன்"னு சொல்லும்போது, அவங்க முகம் வேற ஒரு உணர்ச்சியை காட்டும்.
2. கண்ணை பார்த்து பேச மாட்டாங்க: நிறைய பேர் பொய் சொல்லும்போது, எதிரில் இருக்கிறவங்களோட கண்ணைப் பார்க்க மாட்டாங்க. அவங்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறதால இப்படி பண்றதா சொல்றாங்க. ஆனா, சில சமயம், சிலர் கண்ணோட கண் பார்த்து நல்லாவே பேசுவாங்க. அப்படி பேசுறவங்க அடிக்கடி கண் சிமிட்டினா, இல்லனா பேசும்போது ரொம்ப இடைவெளி விட்டு பேசினா, அவங்க பொய் சொல்றாங்கன்னு அர்த்தம்.
3. பதற்றம்: பொய் பேசுறவங்களுக்குள்ள ஒரு பதற்றம் இருக்கும். அது அவங்க உடல் மொழியில வெளிப்படும். அடிக்கடி முகத்தை தொடுறது, குறிப்பா மூக்கு இல்லனா வாய் பகுதியை தொடுறது, தலைமுடியை கோதுறது, கை விரல்களை மேசை மேல வச்சு ஆட்டுறது, காலை ஆட்டிக்கிட்டே இருக்குறது இதெல்லாம் அவங்க பதட்டமா இருக்காங்கறதுக்கான அறிகுறிகள்.
4. சின்ன மாற்றங்கள்: பொய் பேசுறவங்க ஒருவித முகமூடி போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஆனா, நீங்க ஒரு உண்மையோ, எதிர்பாராத ஒரு விஷயத்தையோ சொல்லும்போது, அவங்க முகத்துல ஒரு பயமோ, பதட்டமோ, இல்லனா வேற ஏதோ ஒரு உணர்ச்சியோ வந்துட்டு போகும். அதை கவனமா பார்த்தா பிடிக்கலாம்.
5. பதில் சொல்ற விதம்: அவங்க ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது, ரொம்ப நேரம் இடைவெளி விட்டு யோசிச்சு சொல்றாங்கன்னா, அவங்க பொய் சொல்றாங்கன்னு அர்த்தம். அவங்க சொல்ற பதில், மனப்பாடம் செஞ்சது போல இருக்கும், இயல்பா இருக்காது.
6. குரலில் மாற்றம்: பொய் பேசுறவங்க திடீர்னு பிடிப்பட்டுட்டா, அவங்களோட குரல்ல ஒரு மாற்றம் தெரியும். திடீர்னு கனமான குரல்ல பேசுவாங்க, இல்லனா ரொம்ப மெதுவா பேசுவாங்க. மூச்சு விடுறதுல மாற்றம் வரும். அடிக்கடி தொண்டையை செருமறது, வாய் காஞ்சு போறது இதெல்லாம் பொய் சொல்றதுக்கான அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் எல்லாம் ஒருத்தர் பொய் சொல்றாருன்னு சொல்றதுக்கு ஒரு வழிகாட்டிதான். ஆனா, இதை மட்டுமே வச்சு ஒருத்தரை பொய் பேசுபவர்னு முடிவு செய்யக்கூடாது. ஒருத்தரோட பொதுவான நடத்தை, சூழ்நிலை இதையெல்லாம் கவனமா பார்க்கணும்.