The importance of time management.
The importance of time management.

நேர மேலாண்மை எவ்வளவு அவசியம் தெரியுமா?!

Published on

வாழ்க்கையின் எல்லா செயல்பாடுகளிலும் நேரம் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால் நேரத்தை சரியாக பயன்படுத்துவது வெற்றியை அடைய அவசியமாக இருக்கிறது.

வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள நேரங்களை சரியாக பயன்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். வாய்ப்புகள் எல்லா நேரங்களிலும் மனிதர்களுக்கு கிடைப்பது இல்லை. சில குறிப்பிட்ட நேரங்களில் நல்ல வாய்ப்புகள் அமைகின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களே வெற்றியாளர்களாக மாறுகின்றனர்.

மேலும் நேரத்தை சரியாக கையாள்வதால் உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுவதோடு உற்சாகம் உருவாக்கும், அனைத்து பணிகளிலும் சிறப்பாக கவனம் செலுத்தலாம், ஊக்கத்தைப் பேணலாம் மற்றும் நேர நிர்வாகத்தின் உதவியுடன் நேரத்தை வீணடிப்பது போன்ற உணர்வைத் தடுக்கலாம். மனநிலை மற்றும் மன ஆரோக்கியம பாதுகாக்கப்படும். தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும், நேரத்தை பிரித்துக் கொள்வதால் கவன சிதறலை கட்டுப்படுத்தலாம், காலை எழுவதில் இருந்து இரவு தூங்கும் வரை அனைத்து வேலைகளையும் அட்டவணை இடுவது பணிச்சுமையை குறைக்கும், அனைத்து வேலைகளின் மீதும் கவனத்தை செலுத்தும் வழியை ஏற்படும். இதனால் எந்த பணியும் விடுபடாமல் தடை இன்றி தொடரும்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்:மிஷன் சாப்டர் 1
The importance of time management.

மிகவும் கடினமான கடமைகளை முதலில் காலையில் அல்லது நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணரும் போதெல்லாம் தொடங்குங்கள் அது வேலையை எளிமையாக்கும்.

குறிப்பாக உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது உடல் நலத்தை வலுப்படுத்தும். நேரத்தை வரையறுப்பதன் மூலம் தேவையற்ற அனாவசிய வேலைகள் மீதான நமது கவனம் குறைக்கும்.

தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நேர மேலாண்மை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதன் மூலம் இழப்பை குறைக்கலாம், நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம், உற்பத்தியை அதிகரிக்க செய்யலாம், லாபத்தை பெருக்கலாம், பணிச்சுமையை குறைக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com