கவனச்சிதறலைத் தவிர்த்து இலக்கை அடைவது எப்படி?

Motivational articles
How to achieve the goal?
Published on

வாழ்க்கையில் எத்தனையோ விதமான அனுபவங்கள் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகின்றன.

அனுபவமே கல்வி அதன்பிறகே படித்த கல்வி:

சிலருக்கு தான் அதிகம் படித்துள்ளோம், எல்லாம் நமக்குத் தொியும், என்ற ரீதியில் யாாிடமும் கலந்து பேசாமல் சில அகராதித்தனமான காாியங்களில் இறங்கி தேவையில்லா சர்ச்சைகளில் சிக்கிவிடுவதும் உண்டு. இதற்குத்தான் படிப்பறிவு ஒருபுறம் இருந்தாலும் அனுபவ அறிவும் கொஞ்சம் தேவை என்பதை உணர்ந்தால்தான் எல்லா விஷயத்திற்கும் நல்லது.பொதுவாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாடுகளை கைவிடவேண்டும். அதற்கு நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்வதே நல்லது.

பதறிய காாியம் சிதறும்:

எந்த காாியத்தை நாம் மேற்கொண்டாலும் பதட்டப்படாமல் நின்று நிதானித்து செயல்படவேண்டும் அதற்கு நமக்கு தேவை பொறுமை எனும் கவசம். பொறுமையாக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் முன்னேற்றப் பாதையின் படிக்கட்டுகள்.

ஆக பதறாமல் எடுத்த காாியம் முடிக்க வைராக்கியமே நமக்கு தேவை. இது படிப்பறிவினால் மட்டும் வருவதல்ல. அனுபவத்தில்தான் வரும். இதைத்தான் காலரிட்ஜ் என்ற அறிஞர் தனது அறிவுரையில் சின்னச்சின்ன அம்சங்கள்தான் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கு கின்றன, எனவே சிறிய சிறிய விஷயங்களில் கவனமாக இருங்கள் என கூறியுள்ளாா்.

எங்கும் எதிலும் கவனச்சிதறல் தவிா்ப்பதே நல்லது:

நாம் ஒரு செயலில் இறங்கும்போது கவனத்துடன் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கை கொண்டு இறங்கவேண்டும்.

ஒரு காாியத்தை தொடங்கி நடத்தும் நிலையில் தடைகள் பல ரூபத்தில் வந்து சேரும். சிலர் நமக்கு அறிவுரை என்ற பெயரில் அவர்களுக்கு சரியெனப்பட்டதை ஆலோசனையாக கூறுவாா்கள். இதேபோல பலரும் பலவித கருத்துக்களை அள்ளி வழங்குவாா்கள் ஏன் என்றால் இங்கும், எங்கும் இலவசமாக கிடைப்பது அறிவுரை மட்டுமே!

இதையும் படியுங்கள்:
நிதானமும் கட்டுப்பாடும்: மகிழ்ச்சியான வாழ்வின் அடிப்படை!
Motivational articles

அவர்கள் அனைவரும் சொல்லும் விஷயத்தை நாம் கேட்டுக் கொண்டாலும், இறுதி முடிவை கவனச்சிதறல் இல்லாமல் நின்று நிதானித்து ஒருமுறைக்கு பலமுறை யோசனை, செய்து செயல்படவேண்டும்.

அதுசமயம் சில கவனச்சிதறல் தலைதூக்கினாலும் அவநம்பிக்கையை கைவிட்டு நம்பிக்கையுடன் தெய்வ வழிபாடுகளோடு செயல்படுவதே புத்திசாலிகளுக்கு அழகு.

இந்த மூன்று விஷயங்களை கடைபிடிப்பதோடு நமக்கு தொியாத பல விஷயங்களை ஈகோ தவிர்த்து பலரிடம் கேட்டுத்தொிந்து அவரது அனுபவங்களை சீா் தூக்கிப் பாா்த்துசெயல் படுவதே நல்லது.

சிந்தித்து பாா்த்து தவறைத்திருத்திக்கொண்டு எதிா்மறை சிந்தனை கழித்து, நோ்மறை சிந்தனையை பெருக்கி, வாழ்ந்து வருவதே முன்னேறத் துடிக்கும் நபர்களுக்கான ஊன்றுகோலாகும். இதைத்தான் கவிஞர் தன் பாடல் வரிகளில் சிந்தித்துப்பாா்த்து, செய்கையை மாத்து, தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ என எழுதி இருப்பாரே அதை கவனத்தில் கொள்ளுங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com