ஆர்வம் இருந்தும் முன்னேற முடியவில்லையா? உடனே மாற்ற வேண்டிய 'Slow Mode' பழக்கம்!

Avoid Procrastination
Avoid ProcrastinationImage credit: AI Image
Updated on

ஆர்வம் அடுத்த கட்டத்திற்கு நகர உதவும். ​​​​​​வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க ஆர்வம் மட்டும் போதாது. உடன் வேகமான செயல்பாடும் வேண்டும்.

பலருக்கு வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்து கோலாக இருக்கும். ஆனால் வெகு சிலருக்கே எப்படி பயணிக்க வேண்டும் என்ற நெளிவு சுளுவுகள் தெரிந்திருக்கும்.

இன்றைய போட்டிகள் நிறைந்த காலகட்டத்தில் பல்வேறு அழுத்தங்கள், எதிர் பார்ப்புகளுக்கு இடையே எதிர் நீச்சல் போட்டு தடைகள், சங்கடங்களை எதிர் கொண்டு கடந்து செல்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

திட்டமிட்டும், தயார் நிலையில் இருந்த போதிலும் எதிர் பார்க்காத நடவடிக்கைகளால் பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவது இயல்பாகி வருவதை கண்கூடாக காண்கிறோம்.

எனவே, தடங்கல்களை தயக்கம் இல்லாமல் கடக்க தேவையான பயிற்சியுடன் களம் இறங்குவது காலத்தின் கட்டாயம்.

முன்னேற துடிக்கும் தனி நபரின் தொய்வு, போட்டியாளர்களுக்கு சாதகமாக மாறி அவர்கள் முன்னேற பெரிதும் உதவும்.

தொய்வு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனம் காட்டும் குணம் (Procrastination). இதுவே தள்ளிப் போடும் மனப்பான்மையை உருவாக்கி, நாளடைவில் அந்த எண்ணம், குணம் பழகி போய் நிரந்தரமாக குடியேறி விடுகின்றது.

போக போக அந்த குணத்தில் இருந்து விடு பட முடியாமல் செயல்பாடுகள் நிதானம் என்ற மோடிற்கு (slow mode) சென்று நடவடிகைகள், செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பின் தங்க நேரிடுகின்றது.

இதனால் தேவையில்லா இழப்புகள் அதிகரிக்க வழி வகுகின்றது. அவை நேரம், பணம், வியாபாரம், வாடிக்கையாளர்கள், புது தொடர்புகள் போன்றவை ஆகும்.

தள்ளி போடாமல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு பாதையில் பயணித்து இருந்தால் இந்நேரம் முன்னேறி செல்வது மட்டும் அல்லாமல் இழப்புக்களை சந்தித்து இருக்கவே வேண்டாம். உடன் தேவையில்லாத அழுத்தங்கள், டென்ஷன்கள், கவலைகள் போன்றவற்றை எதிர் கொண்டு தவித்து இருக்க வேண்டாம்.

தள்ளி போடுதல் (postponement) என்ற குணத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பது தனிப்பட்ட நபர் கவனத்தில் கொண்டு தவிர்க்க வேண்டியது இன்றைய கால கட்டத்தின் அத்தியாவசியம்.

இதையும் படியுங்கள்:
போட்டி நிறைந்த உலகில் உங்களுக்கு ஒரு தனி இடம் வேண்டுமா? இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள்!
Avoid Procrastination

உடனுக்கு உடன் செயல்பட்டு பணிகளை திறம்பட செய்து முடித்தால் போட்டிகள் நிறைந்த இன்றைய சூழ்நிலையில் டென்ஷன் பிரீயாகவும், நிம்மதியோடும் கவனம் செலுத்தி செயல்பட முடியும்.

அத்தகைய நிலையில் சிந்தித்து பொருத்தமான முடிவுகள் எடுப்பது சாத்தியம் ஆகின்றது.

தள்ளி போடுதல் என்ற செய்கையை தவிர்த்து பழகி கொண்டால் நாளடைவில் அதற்கு இடம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேரம் அதிகம் கிட்டும். பின் தங்கி விட்டோமே என்ற மன அழுத்ததிற்கு இடமே இருக்காது.

வெற்றி பெற வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க விரும்புபவர்கள் ஆர்வம், திறமை, சுய கட்டுப்பாடு இவற்றை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு வருவதை கட்டாய செயல்படாக ஏற்படுத்திக்கொண்டால் வேகம் இடம் பெற்று தள்ளிப் போடுதல் என்ற குணம் மறைந்து விடும்.

வெற்றி இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை தன்னம்பிக்கையாக உருவாகி திறம்பட செயல்பட உந்து கோலாக (motivation) பெரிதும் உதவும்.

logo
Kalki Online
kalkionline.com