வன்மத்தை எதிர்த்து வலிமையாவது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Mango tree...
Mango tree...
Published on

ம்முடைய வாழ்க்கையில் சிறியதாக வெற்றியடைந்தால் போதும், நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு போட்டி, பொறாமை, வன்மம் போன்ற எண்ணங்கள் வந்துவிடும். நம்மை பற்றி அவதூறு பேசுவதும், நெகட்டிவாக பேசுவதையும் அவர்கள் வழக்கமாக்கிக் கொள்வார்கள். அதுபோன்ற நபர்களின் வன்மத்திலிருந்து தப்பி எப்படி வலிமையாக வேண்டும் என்பதை இந்த கதையை படித்து  தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு அம்மாவிற்கு தன்னுடைய பக்கத்து வீட்டில் பெரிய மாமரம் இருப்பதை பார்த்துவிட்டு தன் வீட்டில் அப்படியொரு மரம் இல்லையே என்று பொறாமை இருந்தது.

அந்த மரம் வளரக்கூடாது என்று நினைத்து தன் வீட்டில் இருக்கும் எல்லாக் குப்பைகளையும் எடுத்துக் கொண்டு போய் அந்த மரத்தின் கீழ் கொட்டுகிறார். இதேமாதிரி ஒருமாதம் செய்கிறார். அந்த வீட்டில் இருப்பவர்கள் தன்னுடன் சண்டைக்கு வருவார்கள் என்று நினைக்கிறார். ஆனால் யாருமே இவருடன் சண்டைக்கு வரவேயில்லை.

இப்படியே காலம் போகிறது. வழக்கம்போல, அன்றைக்கும் குப்பையை மாமரத்தில் கொட்டிவிட்டு செல்ல முயலும்போது அந்த மாமரத்து வீட்டுக்காரர் இந்த அம்மாவிற்கு ஒரு கூடை நிறைய மாம்பழத்தை எடுத்து கொண்டுவந்துக் கொடுக்கிறார். இந்த அம்மாவும் மனசுக்கேட்காமல், நான்தான் தினமும் உங்கள் மரத்தில் குப்பையை கொட்டுகிறேன். இது தெரிந்திருந்தும் எனக்கு எதற்கு மாம்பழம் தருகிறீர்கள்? என்று கேட்கிறார்.

எங்கள் வீட்டில் இருக்கும் மரம் பெரிய மரம்தான். ஆனால் அதில் பழமோ, காயோ காய்க்காது. எப்போதிலிருந்து நீங்கள் உங்கள் குப்பைகளை கொட்ட ஆரம்பித்தீர்களோ? அப்போதிலிருந்து எங்கள் மாமரத்தில் நிறைய பழமும், காய்களும் காய்க்க ஆரமித்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
ஒருவருடைய மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது தெரியுமா?
Mango tree...

அதனால்தான் உங்களுக்கு பழங்களை கொடுத்தேன் என்று சொன்னாராம். அந்த அம்மா அந்த மாமரம் அழிய வேண்டும் என்று நினைத்து குப்பையே கொட்டினாலும், அந்த மாமரம் அந்த குப்பைகளை தனக்கு  உரமாக்கி மேலும் செழிப்பாக வளர்ந்துவிட்டது.

இதேபோலதான் நம் வாழ்விலும், நம்முடைய வெற்றியை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் வன்மத்துடன்  நம் மீது  தூற்றும் கேலி, கிண்டல், வன்மம் போன்ற குப்பைகளை எல்லாம் நம்முடைய வெற்றிக்கு உரமாக்கிக்கொண்டு வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும். அதுவே வலிமையாகும். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com