
மனித வாழ்வில் நமக்கென வேண்டிய உறவுகளையும், நட்பு வட்டங்களையும் நாம் பொிய சொத்தாக பாதுகாக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் நாம் அவர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைக்கவேண்டியதும் அவசியமே!
பல விஷயங்களில் நமக்கான நம்பிக்கை தொடர்ந்தால்தான் அனைவருக்குமே நல்லதாகும். ஆனால் அந்த விஷயங்களில் நமக்கு பிடிக்காதவர்களிடம் சின்னச்சின்ன கருத்து வேறுபாடு வந்த நிலையில் நம்மிடம் கொஞ்சம் அவர்கள் விலகிவருவதும் நமக்கே தொியவரும்.
பொதுவாகவே பழகினால் உண்மையாக பழகவேண்டும். சில சமயங்களில் சில மனிதர்களுக்கு இரண்டு முகங்கள் நிலவி வருவதும் தொடர்கதையாகிவிட்டதே கொஞ்சம் வருத்தம் மட்டுமல்ல பயமும்தான்.
அதே நேரம் நமக்கு அச்சம் அதிகமாகி வருவது கண்கூடாக நடந்து வருவதும் இயல்பான காரணமாகிறது. மனிதமனங்களில் திடீர் திடீரென வன்மம், பொறாமை, தலைதூக்குவது இயல்பு.
அப்படிப்பட்ட நிலையில் இருந்து நமது நட்பில் அடுத்தவருக்கு மாறுபடுதல் போன்ற தன்மை அவ்வப்போது வந்து போவதும் உண்டு.
அநேகமாக அந்த காலங்களில் நம்பிக்கைக்கு மரியாதை இருந்தது. விகல்பம் இல்லாமல் பழகவேண்டும் என்ற உயரிய நோக்கமும் இருந்து வந்தது. அந்த காலத்தில் நட்புக்கு மரியாதை இருந்துவந்தது. நட்புக்காக எந்தவித தியாகத்தையும் பலர் மேற்கொண்டு வந்துள்ளாா்கள்.
அதுவும் ஒருவகையில் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.
ஆனால் அவையெல்லாம் தற்சமயம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இந்த நிலைபாடுகளுடன் கூடிய போக்கு நல்லதாக தொியவில்லை.
அப்படி நாம் அந்தரங்கமாக பழகிவரும் நட்புதான் நல்லது என நம்பி அதன் வகையில் எதையும் சாதிக்கலாம் என கண்மூடித்தனமான நம்பிக்கையில் சிறிய கீரல் வந்து விட்டால்கூட நாம் அந்த நண்பரிடமிருந்தோ உறவுகளிடமிருந்தோ சற்று விலகி இருப்பது நல்லது.
அதுபோன்ற நிலையில் அவர்களிடம் வெகு ஜாக்கிரதையாய் பழகிவருவதும் சிறப்பானதே. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்பதுபோல, பொதுவாக யாரையும் அவ்வளவு எளிதில் நம்புவதை நாம் குறைத்துக்கொள்வதே நல்லது.
நம்மை உதாசீனம் செய்யும் இடங்களில் நாம் சற்று விலகி இருப்பதும் கூட நல்லகாாியமே!
என்ன இருந்தாலும் நம்பிக்கையோடு பழகிவருவது போன்ற விஷயங்கள் கடந்த தலைமுறையோடு போய்விட்டதோ என்ற பயம் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. தற்போதைய தலைமுறையில் நட்பின் ஆழம் வலுவாக இல்லயோ என்ற பயமும் கவ்விக்கொண்டேதான் உள்ளது.
பொதுவாக உறவு மற்றும் நட்புகளில் பல விஷயங்களில் ஆரோக்கிமான நம்பகத்தன்மையானது இரண்டாம் இடமே வகிப்பது நல்லதல்ல. இதனால் நம்பிக்கைக்கே நம்பிக்கை இல்லா நம்பகத்தன்மை உலவி வருவதும் நல்லதல்ல!