

வாழ்கையில் அடுத்து அடுத்த கட்டங்களுக்கு முன்னேறி செல்வதையே பெரும் பாலானோர் குறிக்கோளாக கொண்டு இருக்கிறார்கள். அப்படி எண்ணுவதுதான் அடுத்த கட்ட நகர்விற்கான முதல் படி.
அவ்வாறு முன்னேறி செல்ல துடிக்கும் பலரால் அவர்களது எண்ணம் அல்லது கனவு லட்சியத்தை அடைய முடியாமால் தடுக்கும் தடைக்கற்களை பற்றியும், அவற்றை முறியடிப்பது எப்படி என்றும் இங்கு காண்போம்.
இங்கு குறிப்பிட்ட சில கருத்துக்களை பலரால் ஒத்துக் கொள்ளவும், ஜீரணிக்கவும் முடியாது என்பது நிதர்சன உண்மையாகும்.
அவைகள் தன்னம்பிக்கை இன்மை, சோம்பேறித்தனம், அனாவசிய பதட்டம், நம்மால் முடியுமா என்ற தயக்கம், தோல்வியை சந்திக்க வேண்டுமோ என்ற பயம், முயற்சி எடுப்பதில் குழப்பம், தேவையில்லாமல் கவலைகள் வளர்த்துக்கொள்வது போன்றவை ஆகும்.
தன் மீதும் தனது திறமைகள் மீதும் முழு நம்பிக்கை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது அவநம்பிக்கை பெரிய தடைக்கல்லாக உருவெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கே வழிகாட்டாது.
நம்பிக்கை வலுப்படும் பொழுது தன்னம்பிக்கையாக மாறமுடியும். தன்னம்பிக்கை கொண்டவர்களால்தான் வெற்றி, தோல்வியை சரி சமமாக பாவித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும்.
சோம்பேறித்தனம் என்பது சிறிதாக ஆரம்பித்து போகப் போக பெரிதாகி மிக முக்கிய தடைக்கல்லாக செயல் படுகின்றது. பெரும் பாலானோர் அவர்களை அறியாமலேயே சோம்பேறி தனத்திற்கு அடிமையாக அதிலிருந்து விடுபட முடியாமல் பல வாய்ப்புக்களை இழந்து தவிக்கிறார்கள். சோம்பேறித்தனம் உள்ளவர்கள் உடனுக்கு உடன் செயல்படாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று செயல்பாட்டை தள்ளிப்போடும் தன்மைக்கு. இடம் கொடுத்து சுகம் அனுபவிக்கிறோம் என்ற மாய வட்டத்தில் சிக்கி முன்னேறும் வாய்ப்புகளுக்கு அவர்களை அறியாமலேயே தடை போட்டுக்கொள்ள சோம்பேறி தனம் உதவுகின்றது.
இந்த தடைக்கல், தடங்கலை உடைத்து வெளியே வர முக்கியமாக சுறு சுறுப்பை வளர்த்துக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
எதற்கு எடுத்தாலும் பதற்றமும், டென்சன் கொண்டும் இருப்பவர்களால் அவ்வளவு சுலபமாக அடுத்து அடுத்த கட்டங்களுக்கு பயணிக்க இயலாது.
அனாவசிய பதட்டம் தேவையில்லாமல் உள்மனதில் பயத்தை வளர்த்து செயல்படுவதின் வேகத்தை குறைத்துவிடும். மேலும் நம்மால் முடியுமா என்ற வேண்டாத சந்தேகத்திற்கு இடம் கொடுத்து வலுவான தடைக்கல்லாகவும் இருக்கும்.
இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்களால் எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். அவை தடங்கல்களாக உருவெடுத்து முன்னேற்றத்திற்கு தடைகல்களாகும்.
இவைகளைத் தவிர்க்க நேர்மறை சிந்தனைகளை படிப் படியாக வளர்த்துக்கொண்டு, அதைப் பின் பற்றி எதிர்மறை எண்ணங்கள், செயல்பாடுகளுக்கு ஒரேயடியாக முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் கட்டாயமாக.
மற்றும் ஒரு முக்கிய தடைக்கல் முயற்சி இன்மை. ஆரம்ப கட்டங்களில் காட்டப்படும் ஆர்வம் நாளடைவில் குறைந்து ஒரு கட்டத்திற்கு மேல் காணாமல் போவதை பலரிடம் காணலாம். இது ஒரு வலுவான தடங்கல் ஆகும். இதை தவிர்க்க எடுக்கும் முயற்சியை தொடர்ந்து தொடர வேண்டியதே சரியான வழி ஆகும்.
தொடர்ச்சி இல்லாமல் இடைப்பட்ட காலங்களில் நிறுத்தி வைத்து செயல்பட்டால், இன்றைய போட்டிகள், மாற்றங்கள் சூழ்ந்த நிலையில் முன்னேறுவது என்பது கடினமாகிவிடும்.
தடங்கல்களாக செயல்படும் இவைகளை தவிர்த்தோ அல்லது தகர்த்தோ அடுத்து அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து முன்னேறி செல்வது என்பது தனி நபரின் எண்ணங்கள், செயல்பாடுகளில்தான் உள்ளது என்பதை உணர்ந்து செயலில் காட்டினால் அந்த தனி நபர் இலக்கை அடைவது இயலும்.