மைண்ட்செட்டை (மனநிலை) உருவாக்கி இலக்குகளை அடைவது எப்படி?

motivation image
motivation imagepixabay.com

ன் இலக்கை அடைய நினைக்கும் லட்சியவாதிக்கு வெறும் திறமைகள் இருந்தால் மட்டும் போதாது. தான் அதை எப்படியும் அடைந்தே தீருவேன் என்கிற மனப்பாங்கு மிகவும் முக்கியம். அதை அடைவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

1. வளர்ச்சி மனப்பாங்கு;

ருவர் தன்னுடைய திறமைகளையும் செயல்பாடு களையும் நம்புவதை விட தான் நினைத்ததை அடைந்தே தீருவேன் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்வது அவசியம். அதற்குத் தேவையான திறனை வளர்த்துக் கொள்ள நேரம் ஒதுக்கி தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 

2. தெளிவான இலக்குகளை நிர்ணயித்தல்;

லக்குகள் மிக மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அது எத்தனை லட்ச ரூபாயில், என்ன நிறத்தில், என்ன பிராண்ட் என்பதில் தெளிவு வேண்டும்.

3. இலக்குகளை சிறியதாக பிரித்துக் கொள்ளுதல்:

ரு வருடத்திற்குள் 50 சிறுகதைகள் எழுதி முடிக்க வேண்டும் என்று ஒரு எழுத்தாளர் தன் இலக்கை நிர்ணயித்து கொள்வதை விட ஒரு மாதத்திற்கு 5 சிறுகதைகள் எழுதி முடிப்பேன் என்று இலக்கு  நிர்ணயிப்பது சிறந்தது.

4. நேர்மறையான சுய கருத்தேற்றம் ( positive affirmation)

‘’நான் என்னுடைய இலக்கை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறேன். சவால்கள் என்னை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கின்றன’’ என்று தனக்குத்தானே சுயமாக பேசி பூஸ்ட் அப் செய்து கொள்ள வேண்டும்.

5. தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளுதல்;

முயற்சியில் தோல்வி வரும்போது அதை நினைத்து மனம் தளராமல் அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தோல்விகள் வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகாட்டிகள் என்று உறுதியாக நினைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தையும் அழகையும் அள்ளித் தரும் செம்புப் பாத்திரக் குடிநீர்!
motivation image

6. சிக்கலான காலகட்டத்திலும் உறுதியாக இருத்தல்; பிரச்சனைகளும் சிக்கல்களும் சூழும் போது அவற்றை  தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைந்த மனிதர்களின் கதைகளையும் வரலாறையும் படித்து மனதை தன்னம்பிக்கை மற்றும் துணிவால் நிரப்பி கொள்ள வேண்டும். 

7. திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுதல்

வாழ்க்கை என்பது தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஒரு நீண்ட பயணம் என்பதை உணர்ந்து உங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமைகளை கூர் தீட்ட வேண்டும். எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். 

இந்த ஏழு விஷயங்களும் ஒரு வெற்றியாளர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கும் விஷயங்கள். இவற்றை சாதனை செய்ய நினைக்கும் ஒருவர் மேற்கொண்டால் அவரும் வெற்றியாளராவது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com