உங்களுடைய Passion-ஐ கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

Passion
How to find your Passion?

வாழ்க்கையில் வெற்றி பெற, மகிழ்ச்சியாக இருக்க, நாம் அனைவருமே நமக்குப் பிடித்த விஷயங்களை செய்ய முயல்கிறோம். வேலை, பொழுதுபோக்கு, இலக்கு எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு சிறந்து விளங்க அதில் நமக்கு ஆர்வம் இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் Passion என்பார்கள். ஆனால் பலருக்கு தங்களது Passion-ஐ கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இந்தப் பதிவில் உங்களது ஆர்வத்தைக் கண்டறிந்து அதை எப்படி வெற்றிகரமாக பின்தொடரலாம் என்பதற்கான சில எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம். 

மறைந்திருக்கும் Passion-ஐ கண்டுபிடிங்கள்: 

அதாவது பேஷன் என்பது நீங்கள் வெளியே பார்க்கும் விஷயங்கள் உங்களுக்கு பிடிப்பது அல்ல. ஆழ் மனதில் இருந்து உங்களுக்கு ஒரு விஷயத்தின் மீது உண்மையான ஆர்வம் ஏற்படுவதுதான் பேஷன். அதைக் கண்டறிய முதலில் உங்களது குழந்தை பருவ நினைவுகளை ஆராயவும். ஏனெனில், அப்போதுதான் அதிகப்படியான கவனசிதறல்கள் இல்லாமல் சில விஷயங்களை உண்மையாகவே விரும்பி செய்திருப்போம். அப்படி உங்களுக்கு ஏதேனும் இருந்தால் அதுவே உங்கள் பேஷன். படம் வரைதல், நடனம் ஆடுதல், விளையாட்டு, கவிதை எழுதுதல் என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

அதைக் கண்டறிந்ததும் முதலில் தற்போது உங்களுக்கு அதில் இருக்கும் திறமைகளை மதிப்பீடு செய்யுங்கள். பின்னர், அதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறதா என பார்க்கவும். அதாவது தொடர்ச்சியாக ஆர்வத்தை இழக்காமல் உங்களால் அதை கொண்டு செல்ல முடியுமா? என ஆராயவும். பின்னர் அந்த திறமையானது இந்த உலகத்தில் இருந்து உங்களுக்கு என்ன பெற்றுத் தரப்போகிறது என்பதையும் யோசிக்கவும். அதேநேரம் அந்த பேஷன் உங்களுக்கு எதுபோன்ற உற்சாகம் மற்றும் திருப்தியையும் தரப்போகிறது என்பதையும் கவனிக்கவும். முடிந்தவரை உங்கள் பேஷன் வாயிலாக பணம் ஈட்டுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு எல்லா வகையிலும் உதவும். 

Passion-ஐ படிப்படியாக கொண்டு செல்லும் வழிகள்: 

முதலில் உங்களது ஆர்வம் தொடர்பான புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். பல புத்தகங்கள் படியுங்கள், பாடம் எடுங்கள், ஆன்லைனில் அதற்காக இருக்கும் Source-கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

பிடித்த விஷயத்தில் திறமையை வளர்த்துக்கொள்ள பயிற்சி மிகவும் முக்கியம். நீங்கள் எந்த அளவுக்கு பயிற்சி செய்கிறார்களோ அந்த அளவுக்கு உங்களது பேஷன் சார்ந்த விஷயங்களில் கைதேர்ந்தவராக மாறலாம். இது உங்களுக்கு ஒரு அபரிமிதமான சந்தோஷத்தை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் நகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 
Passion

பின்னர், உங்கள் ஆர்வம் தொடர்பான செயல்பாடுகளில். அவற்றுக்கென இருக்கும் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று உங்களது திறமைகளை பிறருக்கு தெரியப்படுத்தவும். மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதால், உங்களது பேஷனின் அடுத்தகட்ட வளர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். இதை உங்களது வாழ்க்கைமுறையாக மாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறுங்கள். பேஷன் தொடர்பான விஷயங்களில் இலக்குகளை அமைத்துக்கொண்டு, மன உறுதியுடன் தொடர்ந்து முயற்சித்தால், நீங்களும் சாதனையாளராக மாறலாம். 

ஏதோ இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், YouTube ஷார்ட்ஸ் வீடியோக்களை பார்த்து Passion-ஐ பாலோ செய்யப் போகிறேன் என கிளம்பி வராதீர்கள். உங்களுக்குள் ஒரு உண்மையான ஆசை மற்றும் கனவு இருந்தால் மட்டும் பேஷனை பின்பற்றுவதைப் பற்றி யோசிக்கவும். அப்போதுதான் அதை உங்களால் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்ல முடியும். உங்களுக்கான ஆத்மார்த்தமான மகிழ்ச்சியும் அதிலிருந்து கிடைக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com