ஒரு வேலையை வேகமாக முடிப்பது எப்படி?

How to finish a work faster?
How to finish a work faster?

நாம் ஒரு செயலில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதே நம்முடைய வேலையை வேகமாக செய்வதற்கான திறவுகோலாகும். அதேபோல ஒருவர் தனது வேலையை வேகமாக செய்து முடிக்காததற்குக் காரணம், அவர்களுக்கு அதில் விரக்தி ஏற்படும்போது கவனிச்சிதறல்கள் விரைவாக அவர்களை தொற்றிக்கொள்கிறது. 

எந்தவொரு வேலையாக இருந்தாலும் அதை செய்வதென்பது ஓட்டப்பந்தயம் போன்றது. முதல் ஒரு கிலோமீட்டர் ஓடும்போது உங்களால் முழு ஆற்றலையும் பயன்படுத்தி ஓட முடியும், இதுவே தூரம் செல்லச் செல்ல உங்களது ஆற்றல் குறைந்து ஓட்டத்தின் வேகமும் குறைய ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் செயல்களை செய்யும்போது உந்துதல், மன உறுதி, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த செயலை வேகமாக செய்ய முடியும். இவற்றை சிறப்பாக மாற்றுவதற்கு மூன்று யுக்திகள் உள்ளது.

உங்கள் பணிகளை தனித்தனியாகப் பிரியுங்கள்: எந்த வேலையாக இருந்தாலும் அதை முக்கியத்துவம் வாய்ந்த வேலை, முக்கியத்துவம் அற்ற வேலை என பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளில் எந்த வேலையை முதலில் தொடங்குவதாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த வேலையை முதலில் தொடங்குங்கள். இந்த கருத்தை 'ஈட் தட் ஃபிராக்' என்ற புத்தகத்தில் சிறப்பாகக் கூறியிருப்பார்கள். அதாவது ஒரு தவளையை உங்களைச் சாப்பிடச் சொன்னால் நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உணர்வீர்களோ, அதுபோன்ற உணர்வை உங்களுக்குக் கொடுக்கும் செயல்களை முதலில் செய்துவிட வேண்டும். கடினமான வேலையை முதலில் செய்துவிட்டால் அடுத்தடுத்து வரும் வேலையை செய்வதற்கு எளிமையான மனோபாவம் உண்டாகிவிடும்.

ஸ்பிரிண்ட், பிரேக், ரிப்பீட்: நான் முதலில் கூறியதுபோல எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதை ஓட்டப்பந்தயம் என நினைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் உங்களுக்கு ஆற்றல் இருக்கும்போது அதை வேகமாக செய்ய வேண்டும், பின்னர் இழந்த ஆற்றலைப் பெற போதிய ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு எடுத்து ஆற்றலை மீட்டெடுத்த பின் மீண்டும் அந்த வேலையை முழு ஆற்றலுடன் செய்ய வேண்டும். 

ரீசெட் செய்வது தவறல்ல: நம்மால் எல்லா நேரங்களிலும் சிறப்பாக செயல்பட முடியாது. சில நாட்களில் மனநிலை மோசமாக இருக்கும். உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சில நாட்கள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற தருணங்களை தடையாக எண்ணி கவலை கொள்ளாமல், அன்றைய பொழுது நன்றாக ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் புத்துணர்ச்சியுடன் அடுத்த நாள் அந்த வேலையை செய்வது தவறல்ல. அதற்காக இதையே தொடர்ந்து செய்ய வேண்டாம். உண்மையிலேயே உங்களுக்கு ஓய்வு தேவைப்படுமாயின் அதை எடுத்துக் கொள்வது தவறல்ல. இத்தகைய ரிசெட் ஆப்ஷன் உங்கள் வேலையை துரிதமாக செய்ய உதவும். 

இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு வேலையை செய்தால், அதை உங்களால் வேகமாக செய்து முடிக்க முடியும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com