வாழ்க்கை என்னும் பயணத்தில் நாம் பலவிதமான சவால்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறோம். இந்த பிரச்சனைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஆனால், எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்து முன்னேற வேண்டும் என்பது மனித வாழ்க்கையில் அடிப்படையான ஒன்று. இந்தப் பதிவில் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில், நாம் எதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்கிறோம் என்பதை துல்லியமாக அடையாளம் காண வேண்டும். பிரச்சனைக்குரிய சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து அதன் அடிப்படைக் காரணங்களை கண்டறிய வேண்டும். இதற்கு நாம் நம்மிடம் பல கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்த பிரச்சனை எப்போது தொடங்கியது? இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? இந்தப் பிரச்சனை என்னை எவ்வாறு பாதிக்கிறது? போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்வதன் மூலம், நாம் பிரச்சனையின் மையத்தை அடைய முடியும்.
பல சமயங்களில் நம்முடைய பிரச்சனைகள் நம்முடைய எண்ணங்களால் உருவாக்கப்படுகின்றன. நாம் எதிர்மறையாக சிந்திக்கும்போது நம்முடைய பிரச்சினைகள் பெரிதாகத் தெரியும். எனவே, நாம் நம்முடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ள நேர்மறையாக சிந்திப்பது, நம்பிக்கையுடன் இருப்பது போன்றவை நம்மை பிரச்சினைகளில் இருந்து வெளிவர உதவும்.
பிரச்சனைக்குரிய எண்ணங்களை மாற்றிய பிறகு, அந்த பிரச்சனைக்குரிய தீர்வுகளைத் தேட வேண்டும். பல தீர்வுகளை பட்டியலிட்டு அவற்றில் எது சிறந்தது என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். நம்முடைய நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெறுவது ஒரு நல்ல வழி. தீர்வு கண்டபிறகு அதை செயல்படுத்த வேண்டும். தாமதிப்பது நம்மை பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, தைரியமாக முன்னேறி நம்முடைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இருக்கும் எல்லா பிரச்சினைகளையும் ஒரே நாளில் சரி செய்வது முடியாத காரியம். இதற்கு நிறைய பொறுமை தேவை. நாம் தோல்வியடைந்தாலும் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருந்து தொடர்ந்து பிரச்சினைகளில் இருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். எல்லா பிரச்சனைகளையும் தனியாகவே சமாளிக்க முடியாது. எனவே, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்களின் உதவியை நாடுவது நல்லது. அவர்களுடன் பேசி உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது நமக்கு மன நிம்மதியைத் தரும்.
பலரது பிரச்சனைக்கு காரணமாக இருப்பது நம்மிடம் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததைப் பற்றி சிந்திப்பதுதான். எனவே, எப்போதுமே நம்மிடம் இருப்பதை முதலில் நாம் பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களுக்கு நன்றி கூறுவது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
இவற்றை நீங்கள் முறையாகக் கடைப்பிடித்தாலே வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.