கடந்த காலத்தில் உங்கள் மனதைக் காயப்படுத்திய நிகழ்வுகளை, புதிய கண்ணோட்டம் கொண்டு பார்க்கலாம். கடந்த காலத்தில் நடந்தது அனைத்தும் உங்களுக்கு நன்மை பயப்பதற்காகவே நடந்தன. இனி நன்மை விளையும் போகின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் நீங்கள் ஒரு குழந்தையாக இருந்த சமயத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
பிறகு அச்சமயத்தில் இருந்து இக்கணம் வரை நிகழ்ந்துள்ள முக்கியமான நிகழ்வுகளை மீண்டும் நினைவு படுத்திப்பாருங்கள். ஒவ்வோர் அனுபவத்தின் முடிவிலும், அதை உங்கள் மனத்திலும், இதயத்திலும் நீங்கள் சரி படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? மற்றவர்களுக்கு நீங்கள் செய்துள்ள எந்தக் காரியங்களுக்காக நீங்கள் பின் வருத்தம் கொள்கிறீர்களளோ , அவற்றுக்கான உங்களை நீங்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் உங்களுக்குச் செய்துள்ள மோசமான கார்யங்களுக்காக அவர்களை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்வும் உங்களுக்கு நன்மை பயப்பதற்காகவே ஏற்பட்டதாக நினைக்க வேண்டும்.
உங்களுக்கு ஒருபடிப்பினையை கொடுப்பதற்காகவே அந்நிகழ்வுகள் ஏற்பட்டதாக நீங்கள் உணரவேண்டும். கடந்த கால நிகழ்வுகளைப் புதிய புரிதலுடன் அணுகுவது உங்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். உங்கள் நினைவுகளுக்கு பல புதிய தகவல்களைக் கொடுப்பது உங்கள் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் வேறு விதமாக உணரமுடியும். எனவே அந்த நிகழ்வுகள் குறித்து வருத்தப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் இவ்வாறு செய்த பிறகு, அந்நிகழ்வுகளில் எதையேனும் மீண்டும் உங்கள் மனதில் தோன்றும். ஒவ்வொரு முறையும், அவை உங்களின் நன்மைக்காகவே ஏற்பட்டதாக உங்களுக்கு நீங்களே நினைவூட்டுவதற்கு உங்கள் புதிய தத்துவத்தைக் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்நிகழ்வு குறித்து மோசமாக உணர்வதற்கு பதிலாக, அச்சமயத்தில் அதுதான் சிறந்த நிகழ்வு என்று அங்கீகரிப்பீர்கள். இது செய்வதற்குத் கடினமானதாக இருக்கும். இதற்கு அளப்பரிய விடாமுயற்சி இன்றியமையாதது. ஆனால் நீங்கள் இதை ஒரு முறை முயற்சித்துப் பார்த்தால், அதன் விளைவுகள் பிரம்மாண்டமான வகையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் உங்கள் கடந்த காலத்தை விடத் தயாராக இருந்தால், உங்களால் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க முடியும். கடந்த கால் சுமைகளை கீழே இறக்கி வைப்பது உங்களுக்குப் பெரும் ஊக்குவிப்பதாக இருக்கும்.மலையளவு பிரச்னையிலிருந்து ஒரேயடியாய் ஒதுங்கிச் செல்வது போன்றது. அது உங்களால் அது முடியுமா?. அந்தக் கூடுதல் சுமையை நீங்கள் தூக்கியெறிந்தால்,ஒரு மெல்லிய காற்றில் ஒரு லேசான இறகு போல் மகிழ்ச்சியாக வானில் உயரே பறந்து செல்ல உங்களால் முடியும்.