கவனச் சிதறல்களைக் களைந்து, செய்யும் வேலையில் கவனம் குவிப்பது எப்படி?

Motivation Image
Motivation Image

னிதர்களின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அடிக்கடி உணர்சிகளுக்கு ஆட்பட்டு, செய்யும் வேலையில் கவனம் சிதறுகிறது. அவற்றை எப்படிக் களைவது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கலாம்.

வெளிப்புற கவனச்சிதறல்கள்;

முதலில் தேவையில்லாத வெளிப்புற கவனசிதறல்களை விலக்கி வைப்போம். அது நமது செல்போன் ஆகவோ அல்லது நம்மிடம் வந்து வீணாக அரட்டை அடிக்கும் நமது சக அலுவலராகவோ பணியாளராகவோ இருக்கலாம். மொபைலை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு வேலையை தொடங்குங்கள். உங்களிடம் வம்பளக்க வரும் நண்பரிடம் மதிய உணவு இடைவேளையில் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லுங்கள்.

வேலைகளை திட்டமிடுதல்;

ன்றைய நாளின் வேலைகளை  ஒரு சரியான திட்டமிடுதலுடன் தொடங்குங்கள். வீடோ அலுவலகமோ அன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமாக இருக்கும். முதலில் எதைச் செய்வது என்ற குழப்பம் நீடிக்கும். நிறைய வேலைகள் இருப்பதை நினைத்தாலே  மனது களைப்படைந்து விடும். அதனால் அழகான ஒரு டுடூ (To Do) லிஸ்ட் தயார் செய்யுங்கள். பட்டியல் போட்டு முடித்தாலே பாதி டென்ஷன் குறைந்து விடும். வேலை செய்யும் ஆர்வம் பிறக்கும்.

எது முதலில் என்று தீர்மானம் செய்யுங்கள்;

ன்று நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் 10 என்று வைத்துக் கொள்வோம். அத்தனையும் உங்களால் ஒரே நேரத்தில்  செய்ய முடியாது. எந்த வேலையை முதலில் செய்வது,  அடுத்த வேலை என்ன என்று தெளிவாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஒன்றை முடித்து விட்டே அடுத்ததை தொடங்க வேண்டும்.

பிரித்து செய்யுங்கள்;

டினமான வேலையை செய்ய வேண்டி இருந்தால் அது சற்றே பயம் கொள்ளச் செய்யும். எனவே அந்த வேலையை பிரித்து சிறிது சிறிதாக செய்யலாம். இந்த வேலையின் ஒரு பகுதியை மட்டும் முடித்து விட்டால் மீதி வேலையையும் செய்ய மனது உற்சாகமாக நம்மை தூண்டும்.

மனதுக்குள் இருக்கும் கவனச்சிதறல்கள்

வெளிப்புற கவனச்சிதறல்கள் மட்டும் அல்லாமல், மனதுக்குள் இருக்கும் கவனச்சிதறல்கள் வேலை செய்ய விடாமல் தடுக்கும். அதற்கு முதலில் நமது மனதை மிகவும் அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஒரு எளிமையான வழியை பின்பற்றினால் நமது மனது விரைவில் புத்துணர்ச்சி அடைந்து விடும்.

கண்களை மூடிக்கொள்ளுங்கள். சுற்றுப்புற சத்தம், பார்வையில் படும் காட்சிகள் இவைகளில் இருந்து ஒரு தப்பித்தல் கிடைக்கும். நீண்டதொரு மூச்சை இழுத்து விடுங்கள். அது நுரையீரல் எங்கும் பரவட்டும். இரண்டு நிமிடங்கள்  மூச்சை அங்கேயே நிறுத்தி வையுங்கள். பின்பு அதை வெளியே விடுங்கள். வெளியே விடும்போது உங்கள் மனதில் இருந்த கவலைகள் எல்லாம் வெளியேறி விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு முறை மூச்சை இழுத்து விடுங்கள். இதே போல ஒரு ஐந்து முறை செய்தால் மனம் லேசாவது நன்றாகவே தெரியும்.

இதையும் படியுங்கள்:
வளரிளம் பருவ பிள்ளைகளின் மூளை, இதயம் பலம் பெற…
Motivation Image

இந்தக் கணத்தில் இருப்பது;

ப்போதைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ‘இந்த நேரத்தில் இந்த வேலை எனக்கு மிக முக்கியமானது’ என்று மிகத் தெளிவாக உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். ஒரு பத்து வரிகள் நீங்கள் ஈமெயிலில் டைப் அடிக்க வேண்டி இருந்தால் அந்த நேரத்தில் அதை மட்டும் அனுபவித்து ரசித்து, மனதை முழுக்க அதில் செலுத்தி செய்யுங்கள்.

இந்த வழிகளைக் கடைபிடித்தால், கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு, செய்ய வேண்டிய வேலையில் கவனம் குவிந்து, உற்சாகமாக செய்து முடிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com