தாமரை மலரை கழுவி விட்டு நீரிலிட்டு காய்ச்சி காலை, மாலை அந்த நீரை பருகி வர, மூளை அதிக பலம் பெறும்.
மாதுளம் பழம் மூளைக்கு நல்ல பலத்தைத் தரும். சோம்பை அவ்வப்போது உணவில் சேர்த்தால் மூளை சுறுசுறுப்பு பெறும்.
நெல்லிக்கனியில் செய்த ஜாம் மூளை வளர்ச்சிக்கு உதவும். வேப்பம்பூ, பேரீச்சம்பழம் மூளைக்கு பலம் கொடுக்கும்.
அடிக்கடி கோபப்படுவதால் மூளை பாதிக்கப்படும். சிறுகீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நினைவாற்றல் மற்றும் புத்தி கூர்மை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு, இதய வலுவிற்கு கொத்தமல்லிச் சாறு சாப்பிடலாம்.
தியானம், யோகா போன்றவற்றை செய்து வர, மூளை, மனம், இதயம் புத்துணர்வு பெறும்.
மூளையை குளிர்ச்சியாக வைக்க தயிர் உதவுகிறது. இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. ஞாபக சக்திக்கும், செயல் திறனுக்கும் தேங்காய், பாதாம், வல்லாரை இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேன், துளசிச்சாறு இதய சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்கும்.
உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள மாரடைப்பு வரும் அபாயம் குறையும்.
ரோஜா, ஆவாரை, செம்பருத்தி பூ சாப்பிட இதயம் பலப்படும். இதய பலவீனம் இருந்தால் திராட்சை சாறில் தேன் கலந்து உணவிற்குப் பிறகு பருகலாம்.
வெந்தயக் கீரை இதய வலியை குணப்படுத்தும். வெள்ளைப் பூண்டு, அரைக்கீரை மார்பு வலியை குணப்படுத்தும்.
வேப்பம்பழம், அகத்திப்பூவை பாசிப்பயறு சேர்த்து சாப்பிட இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
வெண்டைக்காய், குப்பைமேனி இலையைப் பொடித்து பாலில் கலந்து சாப்பிட, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் குணமாகும்.