உங்க குடும்பத்துல நிம்மதியே இல்லையா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் சாபத்தின் விளைவா? கர்ம வினைகளில் இருந்து விடுபட்டு, குடும்பத்தோடு நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ எளிய வழி!
Karma and Curses
Karma and CursesImage credit: AI Image
Updated on

பொதுவாக பொியவர்கள் சில நல்ல அறிவுரை வழங்கும் போது, "யாா் மனதும் புண்படாதவாறு நடந்து கொள்ளுங்கள்; யாரையும் துன்புறுத்தாதீா்கள்; அடுத்தவர் சொத்துக்களை நயஞ்சகமாய் வளைத்து சோ்க்காதீா்கள்; யாா் சாபத்திற்கும் (karma) ஆளாகாதீா்கள்" என்பாா்கள்! அது நல்ல அறிவுரை.

சாபம் பொல்லாததுதான்! சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து அநாதையாய் வாழ்வதும் சாபம்தான்!

தாய் தந்தையரை இழந்தாலும் அடுத்தவர்கள் எடுத்து வளா்க்கும்போது சங்கடங்களை எதிா்கொள்வதும் சாபம்!

நாமே இளமையில் வறுமையில் வாடுவது சாபமே! நல்ல படிப்பு அமையாதது சாபமே! நல்ல தாய்க்கு மகனாய் பிறந்தும் தாயை கொடுமைப்படுத்துவதும் சாபம்!

வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுவதும் சாபமே!

நல்ல வாழ்க்கை அமையாதது சாபமே! நல்ல மனைவி அமையாததும் சாபமே!

கிடைக்கவேண்டிய நேரத்தில் தெய்வ அருள் கிடைக்காததும் சாபமே!

நிறைய சொத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியாததும் சாபமே! பிறக்கும் குழந்தை ஊனமாய் பிறப்பதும் சாபமே!திருமண வாழ்வில் வேறு பெண் தொடர்பு ஏற்படுவதும் சாபமே!

பிறக்கும் குழந்தைகளை வறுமையில் வளர்கும் நிலை வருவதும் சாபமே! முதுமையில் பிள்ளைகள் நம்மை வெறுத்து ஒதுக்குவதும் சாபமே!

வாாிசுகள் இருந்தும் அநாதை இல்லத்தில் வாழ்வதும் சாபமே!முதுமையில் பணக்கஷ்டம் வருவதும் சாபமே! இளமையில் உயிரைக்கொல்லும் சிலநோய்கள் வருவதும் சாபமே!

வயோதிகத்தில் உறவுகள் சுயநலமாய் ஒதுங்கிவிடுவதும் சாபமே! வயோதிகத்தில் கூடவே இருந்து பணிவிடைசெய்ய மனைவி இல்லாததும் சாபமே! ஏளனம் செய்யும் உறவுகள் இருப்பதும் சாபமே!

புத்திர பாக்கியம் இல்லாததும் சாபமே! வீண் பிரச்சனைகளில மாட்டாமல் இருந்தாலும் பிரச்சனை தேடி வருவதும் சாபமே!

இதையும் படியுங்கள்:
வார்த்தைகள் தோற்கும் இடத்தில் மௌனத்தால் வெல்வது எப்படி?
Karma and Curses

'எப்போது தந்தை இறப்பாா்' என மகன்கள் நினைப்பது சாபமே! அமாவாசை திதிகளில் திதியை முன்னோர்களுக்கு கொடுக்காமல் இருப்பதும் சாபமே!

ஆக, பாவம் ஓாிடம்.. புண்ணியம் ஓாிடமா!

அழகாய் பிறப்பதும் பின்னர் சீரழிந்து போவதும் சாபமே!

இந்த பாவங்கள் தீர இறை வழிபாடே சிறந்தது!

சாபம் இல்லாமலும் சாபத்தை விலைகொடுத்து வாங்காததும் நல்லதே!

ஆக அடுத்தவரைக் கெடுக்காமல் வாழ்வோம்; சாபத்திற்கு ஆளாகாமல், தாய், தகப்பன், மனைவி மற்றும் வாாிசுகளோடு நோய் நொடி இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழலாமே!

logo
Kalki Online
kalkionline.com