தலைமைப் பண்பை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை முன்னேற்றுவது எப்படி?

Motivation Image
Motivation Imagepixabay.com

ணியாள் (வேலைக்கார) தலைமைத்துவம் (Servant Leadership) என்கிற வார்த்தையை முதல் முதலில் உருவாக்கியவர் ராபர்ட் கிரீன் லீஃப் என்கிற இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர். இது ஒரு குழுவின் தலைவர் தன்னுடைய குழுவினருக்கு தரக்கூடிய முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக் கூறுகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் தந்தால் அவர்கள் சுயமாக சிந்திக்கவும் சிறப்பாக வேலை செய்யவும் முடியும் என்று கண்டறிந்தார். 

இதன்  சிறப்பம்சங்கள் என்ன?

இது ஒரு தலைமைத்துவ  தத்துவம் ஆகும். ஒரு அணிக்கு ஒரு சேவகனாக தலைவரின் முதன்மையான பங்கை வலியுறுத்துகிறது. தன் குழுவில் உள்ள உறுப்பினர்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

1. சேவை;

ஒரு குழு தலைவரின் முதன்மையான கவனம் தன் குழு உறுப்பினர்களுக்கு சேவை செய்வதில் அடங்கியுள்ளது. அவர்களுடைய தேவைக்கு அவர் முன்னுரிமை அளிக்கிறார். அவர்களது நல்வாழ்வை ஆதரிக்கவும் மேம்படுத்துவதற்கான தீவிரமான வழியை தேடுகிறார்.

2. பச்சாதாபம் (எம்பத்தி);

வேலைக்கார தலைவர்கள் இயல்பாகவே அதிக அளவு அனுதாபத்தையும் பச்சாதாப உணர்வையும் கொண்டுள்ளார்கள். தங்கள் குழு உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் பெரும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களுக்கு ஏற்ற ஆதரவான பணி சூழலை உருவாக்கித் தருகிறார்கள்

3. செவி சாய்த்தல்;

இந்த வேலைக்கார தலைமைத்துவத்தின் முக்கிய அம்சமே பயனுள்ள தகவல் தொடர்பு.  இவர்கள் செவி சாய்ப்பதில் வல்லவர்கள். குழு உறுப்பினர்களின் யோசனைகளை மதிக்கிறார்கள். நேர்மையான மற்றும் திறந்த மனதுடன் அவர்கள் குழு உறுப்பினர்களுடன் தகவல் தொடர்பை உருவாக்குகிறார்கள். 

4. குணப்படுத்துதல்:

பணியாளர் தலைவர்கள் தங்கள் குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளனர். பணியாளர்கள் மனதளவில் காயம் பட்டிருந்தால் அவற்றை உடனடியாக குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்களது காயத்தை ஆற்றவும் நேர்மறையான சூழலை உருவாக்கி தங்கள் பணியினை சிறப்பாக செய்யவும் அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

5. விழிப்புணர்வு;

இவர்கள் தங்களுடைய குழுவினருக்கு ஒரு விதமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். அவர்களுடைய பங்கு அந்த நிறுவனத்திற்கு எத்தனை முக்கியம் என்பதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். இதனால் பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்னும் நன்றாக வேலை செய்யவும் சிறந்த முடிவுகளை எடுக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

6. நேர்மறையாக தூண்டுதல்;

இவர்கள் அதிகாரத்தையோ அல்லது அடக்கு முறையை கையாள்வதில்லை ஊழியர்களை வற்புறுத்தும் செயலிலும் இறங்குவதில்லை. மாறாக அவர்களை நேர்மறையாக தூண்டி விடுகிறார்கள்.  குழுவாக வேலை செய்வதின் முக்கியத்துவத்தையும் அதனுடைய நன்மைகளையும் பற்றி அவர்களை உணரச் செய்து வேலை செய்ய வைக்கிறார்கள்

7. கருத்துருவாக்கம்:

வேலைக்காரத் தலைவர்கள் அன்றாடப் பணிகளுக்கு அப்பால் சிந்திக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் முன்னோக்கி சிந்திக்கும் மனநிலையை கொண்டுள்ளதால் வருங்காலத்தை வளமாக கொண்டு செல்ல நிறைய கருத்துக்களை வைத்திருக்கிறார்கள். அதை தங்களுடைய குழுவினருக்கு பகிர்கிறார்கள் திறம்பட குழுவை நடத்தவும் செய்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
ஆலப்புழா படகு வீடு ஒரு நாள் ரம்யமான பயணம்! மறக்க முடியாத அனுபவம்!
Motivation Image

8. சேவை;

பணியாள் தலைவர்கள் தங்களை அந்த குறிப்பிட்ட குழு அல்லது நிறுவனத்தின் வேலைக்காரர்களாக கருது கிறார்கள். தங்களுடைய குழுவினரின் நலனுக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். அதே சமயம் தங்கள் சார்ந்துள்ள நிறுவனத்தின் வளத்தை அதிகப்படுத்தவும் அதனுடைய வளர்ச்சியை விரிவுபடுத்தவும் புத்திசாலித்தனமாகவும் ஊக்கமுடனும் வேலை செய்கிறார்கள். 

9.  வளர்ச்சி;

தம்முடைய குழுவினரின் சொந்த மற்றும் தொழில் ரீதியான வளர்ச்சிக்கு இந்த சேவக தலைவர்கள் உறுதியளிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளைக் கொடுத்து தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் குழுவின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், மேம்படுத்தவும் வாய்ப்புகளை அளிக்கிறார்கள். 

10. குழுவிற்குள் ஒரு சமூகம்

இந்த தலைவர்கள் குழுவிற்குள் ஒரு சமூகத்தை உருவாக்குகிறார்கள். குழுவாக இணைந்து வேலை செய்வதையும் ஒற்றுமையோடு இருப்பதையும் அவர்கள் நன்றாக ஊக்குவிக்கிறார்கள். குழு மனப்பான்மையை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு நேர்மறையான மற்றும் உற்சாகமான பணி சூழலை உருவாக்கி அவர்களை சந்தோஷமாக வேலை செய்ய வைக்கிறார்கள்.

சேவக தலைமைத்துவம் தங்களுடைய குழுவினரின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கிறார்கள் அந்த தலைவரின் வெற்றி என்பது குழுவினரின் ஒட்டுமொத்த வெற்றியால் உருவாக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com