இன்றைய காலத்தில் எல்லா விஷயங்களும் வேகமாக கிடைத்துவிட வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதன் காரணமாகவே தங்கள் வாழ்க்கையை அவசர அவசரமாக வாழ்கின்றன. இதில் நிதானமாக இருப்பது என்பது மிகவும் அரிதான பொக்கிஷம் போன்றது. தொழில்நுட்ப வளர்ச்சி, போட்டி நிறைந்த உலகம் என அனைத்தும் நம்மை அவசரமாக இருக்கத் தூண்டுகின்றன. ஆனால், இந்த அவசரம் நமக்கு மன அழுத்தம், பதட்டம், உடல்நலப் பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபட்டு நிதானமாக வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நிதானம் என்பது வெறும் ஒரு வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கைத் தத்துவம். நிதானமாக இருப்பதன் மூலம் நம்மை நாமே புரிந்துகொள்ள முடியும். நம் உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு கிடைக்கும். இதனால், நாம் எதையும் தெளிவாக சிந்தித்து, நம்மைச் சுற்றி உள்ளவர்களுடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நிதானமான வாழ்க்கைக்கு உதவும் வழிகள்:
தியானம் என்பது மனதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவித்து உடல் மற்றும் மனதை ஓய்வெடுக்க வைக்கும் ஒரு செயல்முறை. தினசரி சிறிது நேரம் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து வாழ்க்கையில் நிதானத்தை அதிகரிக்கலாம்.
யோகா என்பது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கும் ஒருவகை உடற்பயிற்சி. இதைச் செய்வதால் உடல் நலத்தை மேம்படுத்திக் கொண்டு, மனதுக்கு ஓய்வு தர முடியும்.
இயற்கையை ரசிப்பது மனதை அமைதிப்படுத்த ஒரு சிறந்த வழி. அருகில் இருக்கும் பூங்காவில் நடப்பது, கடற்கரையில் உட்கார்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது போன்றவை மனதிற்கு அமைதியைக் கொடுத்து நிதானமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
புத்தகங்கள் வாசிப்பது நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லும். ஒரு நல்ல புத்தகம் நம்மை மகிழ்விப்பதுடன் நமது அறிவையும் வளர்க்கும். இதே போல ஓவியம் வரைதல், இசை கேட்பது, நடனம் ஆடுவது போன்ற கலைகளில் ஈடுபடுவதால் நம்முடைய படைப்புத்திறன் வெளிப்படும். இது நம் வாழ்க்கையை நிதானமாக மாற்றும்.
இந்த காலத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நமது சமூக வாழ்க்கை மோசமாக உள்ளது. எனவே, இதிலிருந்து அவ்வப்போது இடைவெளி எடுப்பது நல்லது. மேலும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வது, மனதிற்கு நல்ல உணர்வைக் கொடுக்கும். நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்து, வாழ்க்கையை நிதானமாக ரசித்து வாழ வைக்கும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் வாழ்க்கையை எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக வாழலாம். நிதானமான வாழ்க்கை என்பது நம்மை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிறப்பாக மாற்றும். எனவே, நிதானமான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களால் முடிந்த முயற்சிகளை எடுக்கத் தொடங்குங்கள்.