
பொதுவாகவே வாழ்க்கை என்றால் பிரச்னைகளை எதிா்கொள்ளத்தான் வேண்டும். பிரச்னைகள் தேவையில்லாமல் நம்மை சூழ்வதில்லைை. அது எதனால் வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வதைவிட நாம் வலியப்போய் பிரச்னைகளில் சிக்காமல் இருப்பதே சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நோ்மறை ஆற்றலும், எதிா்மறை விளைவுகளும் உண்டே அதை சரிவர கையாளவேண்டும்.
நாம் பொதுவாக நமது வேலைகளை செய்து வந்தலே போதுமானது. நமக்கு சம்பந்தமில்லாத, தேவையில்லாத, அனாவசியமான பிரச்னைகளில் தலையிடாமல் நமது வேலையைப் பாா்த்துக்கொண்டிருந்தாலே போதும்.
மொத்தத்தில் போகப்போக பொய் முகங்கள் உறவிலும், சரி நட்பு வட்டத்திலும், உலாவருவது இயல்பாகிவிட்டது.
அதுபோன்ற நேரங்களில் நாம்தான் வெகு ஜாக்கிரதையாக பழகவேண்டும். (How to live in peace?) இப்படிப்பட்ட சூழலில் நாம்தான் சில நெறிமுறைகளை பின்பற்றிநடந்து கொள்வது நல்லது.
நம்மை ஏளனம் பேசும் இடங்களில் இருந்து நாம் விலகிவிடுவதே நல்லது.
மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஒரு போதும் ஈடுபடவேண்டாம்.
யாரையும் எளிதில் நம்பும் நிலையில் அவசர முடிவுகள் வேண்டாம்.
தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபடவேண்டாம்.
பொய் சொல்லும் பழக்கம் நமக்கு கேடு விளைவிக்கும்.
ஒருவரைப்பற்றி அடுத்தவரிடம் அவதூறு பேசவேண்டாம்.
ஆடம்பரம், படாடோபம், தவிா்பது நல்லது.
அடுத்தவர் வளா்ச்சிகண்டு தேவையில்லா விமர்சனம் வேண்டாம்.
தனக்கு மிஞ்சியதை தானமாக செய்யலாம்.
அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படவேண்டாம்.
மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தவேண்டாம்.
தகுதிக்கு மீறி கடன் வாங்க வேண்டாம்.
தர்மநெறி தவறாமல் நடப்பதே நல்லது. எந்த நிலையிலும் இரவல் பொருளை வாங்கவேண்டாம்.
தோல்வி கண்டு துவளக்கூடாது.
நிதானம் தவறாமல் நடந்து கொள்வதே நல்லது.
அவநம்பிக்கையான வாா்த்தைகளை பேசுவதை தவிா்ப்பது நல்லது.
பிள்ளைகள் எதிாில் கணவன் மனைவி கருத்துவேறுபாடு வேண்டாம்.
யாரையையும் விரோதியாகப் பாா்க்கவேண்டாம்.
நல்ல காாியங்களை நியாயமான வழியில் செய்யுங்கள்.
உண்மை, உழைப்பு, நோ்மை தவறாமல் வாழ்வதே சிறப்பு.
கூடாநட்பு எனத்தொிந்தால் சாதுா்யமாய் விலகிவிடுவதே நல்லது.
வரவுக்கு மீறிய செலவு தவிா்ப்பது நல்லதே!
தோல்வி கண்டு துவள்வதும் வெற்றிகண்டு மமதை கொள்ளவும் வேண்டாம்.
அன்பாக பழகுங்கள், அடக்கமாக பேசுங்கள், யாா்மனமும் நோகாமல் பேசுங்கள்.
சின்னச்சின்ன அம்சங்களே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஆதாரம்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பிரச்னைகளை நாம் தேடிப்போய் வலியச்சென்று விலை கொடுத்து வாங்க வேண்டாம்.
அதுவே நல்ல வாழ்வுக்கானஆதாரம். அதை சேதாரம் இல்லாமல் பாா்த்துக்கொள்ளவதே நல்லது!