கிண்டல் செய்தவர்கள் காணாமல் போனார்கள்! அந்த மாணவன் செய்த 'மேஜிக்' இதுதான்!

தன்னைக் கிண்டல் செய்த சக ஊழியர்களால் தற்கொலை வரை சென்ற மாணவன், பில் ஹாரிஸின் ஆலோசனையால் எப்படி மீண்டார்? கவனத்தை மாற்றினால் கவலை மறையும் எனும் உண்மை கதை!
A man using Laptop - Self-confidence stories
A man using Laptop - Self-confidence storiesAI Image
Updated on

அந்த மாணவர் பல வேதனையான அனுபவங்களையும் சம்பவங்களையும் 30 பக்கத்திற்கும் மேலாக விவரித்து பில் ஹாரிஸ்க்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

சிறிய விஷயத்துக்கு கூட பெரிதாக கோபப்படுவார் அந்த மாணவர். இது மற்றவர்களுக்கு கேலியாக அமைந்தது. இதனால் அவருடன் வேலைப் பார்த்த மற்ற சக ஊழியர்கள் அவரை கிண்டல் செய்தார்கள். இதனால் அந்த மாணவருக்கு பல்வேறு சூழ்நிலைகளிலும் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் மன உளைச்சல் தந்து துன்புறுத்தியதோடு இவரிடம் வம்பிழுத்தும் விளையாடினார்கள்.

இவற்றையெல்லாம் தன்னுடைய மின்னஞ்சலில் விலாவாரியாக விவரித்து பில் ஹாரிசுக்கு எழுதி அனுப்பியிருந்தார். மாணவர் அனுப்பிய 30 பக்கத்திற்கும் மேலான மின்னஞ்சலை பில்ஹாரிஸ் பொறுமையாக வாசித்துப் பார்த்தார். தன் மனம் உடைந்து இருப்பதால் தற்கொலை செய்ய எண்ணுவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

மாணவரின் மின்னஞ்சலை பொறுமையாக படித்த பில் ஹாரிஸ் மாணவனுக்கு பதில் எழுதினார். மாணவனே! முதலில் நீ எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை மீண்டும் நீயே படி! உனக்கு விருப்பமில்லாத விஷயத்தில் நீ அதிகம் கவனம் செலுத்தியதால் தான் துன்பத்தின் பிடியில் சிக்கினாய் என்பதை நீயே கண்டறிவாய் என பதில் அனுப்பியிருந்தார்.

ஒரு நாள் முழுவதும் தனக்கு பிடிக்காத விஷயத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, யாராவது நம்மிடம் வம்பு இழுப்பார்கள் என்ற மனநிலையை அகற்றிவிட்டு கவலைப்படுவதை விட்டு விட மாணவனுக்கு பில் ஹாரிஸ் அறிவுறுத்தினார்.

அடுத்த வாரத்தில் உன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக உனது மனம் விரும்பாதவற்றிலிருந்து விலகுவதை காணலாம் என தொடர்ந்து வழி காட்டினார்.

அந்த மாணவனும் பில் ஹாரிஸின் அறிவுரையை பின்பற்றினான். என்ன ஆச்சரியம்! அவனை கிண்டல் செய்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்கள். அவனுடைய இடத்திற்கே வந்து வம்பு இழுத்தவர்களும் இப்போது அவனை கண்டு கொள்ளவில்லை.

அவன் பேசும் போது கிண்டலும் கேலியும் செய்தவர்கள் இப்போது அவனது பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்கள். இப்படியே ஒவ்வொரு வாரமும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

இதையும் படியுங்கள்:
ஆடி அடங்கும் வாழ்க்கையில் எத்தனை வேறுபாடுகள்...
A man using Laptop - Self-confidence stories

சில வாரங்களுக்கு பிறகு அந்த மாணவன் தன்னுடைய முழு கவனத்தையும் வேலையிலும் அன்றாட பணிகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு செய்தான்.

தன்னுடைய நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால் அந்த மாணவன் மிகவும் மன மகிழ்ச்சியோடு புத்துயிர் பெற்றான். இது ஒரு உண்மை சம்பவம்.

இதிலிருந்து நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் நாம் நமது கவனத்தை நிகழ்காலத்தில் செலுத்தாமல் தேவையில்லாதவற்றில் செலுத்துவதால் தான் ஏற்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நமது கவனம் முழுவதும் நமது செயலில் ஏற்பட்டு வெற்றி பெறும் போது எல்லாத் தடைகளும் தகர்ந்து விடும். இதை வாழ்க்கையில் முதன்மையாக கடைபிடித்தால் ஜெயிப்பது ஒன்றும் அசாதாரண காரியம் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com