

ஆடி அடங்கும் வாழ்வினில் தான் எத்தனை எத்தனை ஆட்டம் பாட்டம்!
ஆட்டத்தை ஆரம்பித்த இறைவன் ஏனோ முடிக்காமல் விடுவதில்லை!
மேல் நிலை கல்வி வந்ததும் பெற்றோா்கள் அறிவுரை எட்டிக்காயாய் கசந்ததே!
மேற்கல்வி பயிலும் வேலை விருந்தாய்வந்த கூடாநட்பு கேடாய் முடிந்தது!
வேலை கிடைத்ததும் வருவாயை குறைத்திட காதல் மலர்ந்தது!
காதல் மலர்ச்சியில் கடமைகள் காற்றில் தானாய் பறந்தன!
எங்கிருந்தோ வந்தவள் துணையாய்யிருக்க உடன்பிறப்புகளை உதாசீனம் செய்தாய்!
பெற்றோா் சொல் மீறியே காதல் தந்தவள் கரம் தனை பிடித்தாய்!
தந்திரமாய் தாரமானவள் தலையணை மந்திரம் கற்றே வந்தாள்!
தாயை மறந்தாய், தகப்பனை வெறுத்தாய், தன்மானம் இழந்தாய்!
உதவிய உறவுகள் உன்னை வெறுத்தன நின் சொல் கசந்தன!
மாமியாா், மாமனாா், மச்சினன், மச்சினி மனம்போல வாழ்வை தொடர்ந்தாயோ!
சொந்தம் இழந்து நமக்கென இருக்கும் மாமனாா் உறவே நலமென வாழ்ந்தாய்!
தங்கை திருமணம் தடைமேல் தடைபட தகப்பன் கடமை அதுவென நகர்ந்தாய்!
மனைவியின் தங்கைக்கு மாப்பிள்ளை பாா்த்தாய் மணமேடை வரை நீயே நின்றாய் !
குழந்தை பேறு இல்லாநிலையில் மரியாதை இழந்தாய்!
தகப்பன் மரணம் தனக்கிலை பந்தம் தள்ளியே நின்றாய் !
தாயை மறந்தாய் அவமானம் சுமந்தாய் தனிமரமாகும் நிலையே தொடர!
மனைவியோ மறுமணம் நாடிட மருகிப் போனாய் சொத்தை இழந்தாய் !
சொந்தம் வருமா பந்தம் வருமா தேடல்தனிலே இளமை தொலைத்தாய்!
இனி ஒரு சொந்தம் தேடிப்போனாய் தேடல் கனவு பகலில் வந்தது!
தகவல் தொிந்து தாயவள் வந்தாள் மடிமீது தாங்கியே நின் கவலை தொலைந்திட!
தாயின் மடிதனில் தனிமை வாழ்வாய் தாயைக்காத்திடும் தனையனாய் மாறு!
ஆடி அடங்கும் வாழ்க்கையிது ஆறடி நிலமே சொந்தமாகுமே புாிகிறதா!
தொிந்திடு மகனே ! தொிந்திடு இனியாவது நன்றாய் திருந்திடு !
வாழ்க்கை எனும் ஓடம் அது வழங்கிடுமே நல்ல தொரு பாடம் !