
பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் சோம்பேறித்தனம் என்பது அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் சூழ்ந்துள்ள இந்நவீன உலகில் அவற்றை சொல்லவே தேவையில்லை. அந்த வகையில், சோம்பேறித்தனத்தை போக்குவதற்கான எளிய வழிகளை பற்றி இங்கே வாசிக்கலாம்.
சோம்பேறித்தனம் வருவதற்கான காரணம் என்ன?
ஓய்வு மற்றும் சோம்பேறித்தனம் என்பது வேறுபட்ட பொருள்கள். அதிகமாக வேலை செய்து, அதன் காரணமாக எடுக்கப்படும் இடைவேளை ஒன்றை ஓய்வாக கருதலாம். ஆனால், எதையும் செய்யாமல் நேரத்தை கடத்துவதை சோம்பேறித்தனம் என்றே சொல்ல வேண்டும்.
சோம்பேறித்தனமாக இருந்தால், வாழ்வில் முன்னேற முடியாது என்பதே பெரும்பாலும் வாழ்க்கை ரீதியான காரணமாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்கு தடையாக இருக்கும். இதனை விட்டுவிட்டால் வாழ்க்கையில் உயர்ந்த மனிதராக சாதனை அடைய முடியும்.
சோம்பேறித்தனத்தை தடுக்கும் வழிகள்:
1. நம்மை தெளிவுப்படுத்தி கொள்வது
முதலில், நம்மை நாமே ஆராய்ந்து எதற்காக இந்த சோம்பேறித்தனம் வருகிறது என்பதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதன் பின், நம்மை தெளிவுப்படுத்தி கொண்டு தெளிவான திட்டமிட வேண்டும்.
2. இப்போதே செய்யுங்கள்
சோம்பேறித்தனம் நம்மை விட்டு விலக வேண்டும் என்றால், 'அப்புறம் பார்த்துக்கலாம், பிறகு செய்துகொள்ளலாம்' என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும்.
3. இரவு நேரத்தில் நல்ல தூக்கம் முக்கியம்
ஓய்வு இல்லாமை மற்றும் குறைந்த தூக்கம் போன்றவை சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள். இதைத் தவிர்க்க, இரவு நேரத்தில் முறையான மற்றும் முழுமையான தூக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
4. ஊக்கப்படுத்த வேண்டும்
ஒரு செயலை செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகளை ஆராய்ந்து, அதில் முழுமையான நம்பிக்கையை வைக்க வேண்டும். இவ்வாறு நம்மை நாமே ஊக்கப்படுத்துவதன் மூலம் சோம்பேறித்தனம் நம்மை விட்டு விலகிவிடும்.
5. லட்சியத்தின் வழி
நமக்கான லட்சியத்தை யோசித்து, அதையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் பாராட்டு, மதிப்பு மற்றும் மகிழ்ச்சி நம் லட்சியத்தை மேலும் உயர்த்தும்.
அன்றே செய், நன்றே செய் என்ற எண்ணத்துடன், நம் லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை தள்ளி வைக்காமல் உடனே செய்ய வேண்டும். இந்த மன உறுதியுடன் செயல்பட்டால், சோம்பேறித்தனம் நம்மை நெருங்காது. நாம் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு முன்னேறி, சாதனைகள் அடைந்தாலும், நம் லட்சியத்தை நோக்கி தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இப்போது செய்யும் செயல்கள் தான் நாளைய வெற்றியை உறுதி செய்கின்றன.