
ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய குணம், நடத்தை போன்றவற்றைப் பற்றி அனுமானிப்பது என்பது ஒரு நுணுக்கமான திறமையாகும். மக்களைப் படிக்கும் திறனை யார் வேண்டுமானாலும் மேம்படுத்த முடியும். அதற்கு சிறிது முயற்சியும் பயிற்சியும் தேவை. மக்களை எவ்வாறு திறம்பட பார்த்தவுடன் புரிந்துகொள்வது என்பது குறித்த சிறந்த 10 வழிகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
ஒருவரின் முழு ஆளுமையையும் பார்த்தவுடன் புரிந்து கொள்வது சவாலானதாக இருந்தாலும் நமது மூளை பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் விரைவான தீர்மானங்களை எடுக்கிறது என்று உளவியல் கூறுகிறது. இந்த ஆரம்ப அனுமானங்கள் முழுமையாக துல்லியமாக இல்லாவிட்டாலும், அவரைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்க முடியும்.
1. கண்கள்;
அகத்தைக் காட்டும் கண்ணாடி முகம். அதிலும் கண்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும். நேருக்கு நேராக கண்களைப் பார்த்து ஒருவர் பேசினால் அவர் தன்னம்பிக்கை மிக்கவர் என்பதை அறிந்து கொள்ளலாம். கண்களைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து ஒருவர் பேசினால் அவர் அசவுகரியமாக உணர்கிறார், கவனச்சிதறல் உள்ளவர், பொய் சொல்கிறார். கண்களை குறுக்கிக் கொண்டு பேசுபவர்கள் சந்தேகப் புத்தி உள்ளவர்கள் என தெரிந்துகொள்ளலாம்.
2. புருவம்;
புருவம் உயர்த்தி பேசுபவர்கள் எதிலும் ஆர்வத்துடன் ஆச்சரியத்துடன் இருக்கும் இயல்புடையவர்கள். புருவத்தை சுளித்துக்கொண்டே பேசுபவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
3. உதடுகள்;
சிலர் உதடுகளைக் கடித்துக்கொண்டு பேசினால் அவர்கள் மனப் பதற்றத்தில் இருக்கிறார்கள். அடிக்கடி உதடுகளை துடைத்துக் கொண்டால் அவர் ஏதோ மறுத்து சொல்ல வருகிறார் அல்லது கோபத்தில் இருக்கிறார். உதடுகளை கடித்துக்கொண்டே இருந்தால் அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம்.
4. கைகள்;
இரண்டு கைகளையும் விரித்தபடி பேசுபவர்கள், நட்புடன் பழகக் கூடியவர்கள். எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். கைகளை இறுக்க மூடியபடி அல்லது மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி பேசினால் அவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள் அல்லது உங்களிடம் பேச ஆர்வம் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்..
5. உடல்மொழி;
முன்னோக்கி சாய்ந்து பேசினால் உங்கள் மீது ஈடுபாட்டுடன் ஆர்வத்துடன் பேசுகிறார்கள். பின்னோக்கி சாய்ந்தால் சலிப்பு நல்லது ஆர்வமின்மையைக் குறிக்கலாம். இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு பேசும் நபர்கள் பிறரை கட்டுப்படுத்தவும், அடக்கியாளவும் நினைப்பவர்கள். முதுகுக்கு பின்னால் கைகளை கட்டிப்பிடி பேசும் நபர்களுக்கு சலிப்பு பதட்டம் அல்லது கோபமாக இருக்கிறார்கள். பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு பேசும் நபர்கள் எதையோ மறைக்கிறார்கள். கைகளை அசைத்து பேசும் நபர்கள் தன்னுடைய கருத்தை மிக வலிமையாக வலியுறுத்திச் சொல்பவர் என்று தெரிந்து கொள்ளலாம்.
6. குரல் தொனி;
அமைதியாக பேசுபவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்கள். நடுங்கும் குரலில் அல்லது குரலை உயர்த்தி பேசுபவர்கள் நேர்மையற்றவர்கள் அல்லது பதற்றத்துடன் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். வேகவேகமாக பேசுபவர்கள் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள். மெதுவாக பேசுபவர்கள் சிந்தனைவாதிகள். எதையும் தயக்கத்துடன் தான் செய்வார்கள். மிக மெதுவான குரலில் பேசுபவர்கள் கூச்ச சுபாவிகளாக இருப்பார்கள், தன்னம்பிக்கை அற்றவர்கள்.
7. பேசும் வார்த்தைகள்;
பேச்சில் ‘நான்’ என்று அடிக்கடி பயன்படுத்தினால் அவரது சுய கவனமும், சுயநலமும் மிக்கவர். நாம் என்பது கூட்டு மனநிலையைக் குறிக்கிறது. நான் நினைக்கிறேன், என்று அடிக்கடி சொல்பவர் பிறரை அடக்கியாள நினைப்பவர்.
8. கேட்பது;
பிறர் பேசுவதை பொறுமையாக குறுக்கிடாமல் கேட்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பிறர் மீது அனுதாபம் மிக்கவர்கள். ஒருவரை பேசவிடாமல் குறுக்கே பேசிக்கொண்டே இருப்பவர்கள் அடக்கியாள நினைக்கிறார்கள். இந்த எட்டு வழிமுறைகளும் ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது குணாதிசயங்களை அனுமானிக்க உதவும்.