சரியாக சிந்திப்பது எப்படி தெரியுமா? இது தெரிந்தால் எல்லாம் மாறும்!

how to think properly?
how to think properly?

இவ்வுலகில் பெரும்பாலான நபர்களுக்குத் தான் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அது உண்மையல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே சரியாக எப்படி சிந்திப்பது என்பது தெரியும். நல்ல சிந்தனையாளன் என்பவன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறான். பல புதிய விஷயங்களை தேடிக் கற்கிறான். நீங்கள் அப்படி இருக்கிறீர்களா?

உங்களைச் சுற்றி இருக்கும் நபர்களில் எத்தனை பேர் தைரியமாக சில செயல்களை செய்கிறார்கள்? எத்தனை பேர் அவர்களின் பிரச்சனைக்கான தீர்வை அவர்களே கண்டுபிடிக்கிறார்கள்? 

நீங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக சிந்திக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை உங்களால் கண்டுபிடிக்க முடியும். நல்ல சிந்தனை என்பது தெளிவான எண்ணங்களில் இருந்து வருகிறது. தெளிவான என்னமானது ஒரு மோசமான சூழ்நிலையின் நல்லது கெட்டது அனைத்தையும் நினைத்துப் பார்க்கும். இப்படி உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களிலும் நல்லது கெட்டதை சிந்தித்து நீங்கள் முடிவெடுத்தாலே, உங்களுடைய சிந்தனை நன்றாக இருக்கிறது என அர்த்தம். 

ரோமாபுரியை ஆண்ட தலைசிறந்த அரசர்களில் Marcus Aurelius என்பவரும் ஒருவர். இவர் ஒரு தலை சிறந்த தத்துவ ஞானி ஆவார். இவரது சிறப்பான சிந்தனைகள் மூலமாகவே நல்ல அரசராக இருந்தார் என சொல்லப்படுகிறது. இவருடைய தெளிவான எண்ணங்கள் காரணமாகவே நல்ல சிந்தனையாளராக இவர் இருந்திருக்கிறார். நம்முடைய செயல்களுக்கும் சிந்தனைக்கும் சிறப்பான தொடர்பு உள்ளது என்பதற்கு இவரே உதாரணம். நீங்கள் அனைத்தையும் சிறப்பாக சிந்திக்க வேண்டும் என்றால் உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே சரி செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். 

இது தவிர உங்களுடைய எண்ணங்களை வரிசைப்படுத்துங்கள். அது எதுபோன்ற விஷயங்களை உங்களுக்குப் பெற்றுத்தரும் என்பதில் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த எண்ணங்களில் எது நடைமுறைக்கு ஒத்துவரும் என்பதை தேர்வு செய்து அவற்றை செயல்படுத்துவதற்கு முயன்றால், நீங்களும் நல்ல சிந்தனையாளாக மாறலாம். 

இதையும் படியுங்கள்:
Samsung galaxy S24 ரொம்ப மோசம் பா.. பயனர்கள் புகார்.. பதற்றத்தில் நிறுவனம்! 
how to think properly?

நீங்கள் சிந்திப்பது சரியா? தவறா? எனக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. நீங்கள் சிந்திக்கும் விஷயங்கள் நடைமுறைக்கு எதார்த்தமானதாக இருந்தால், அல்லது உங்களுடைய பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் கொடுக்கும்படியாக இருந்தால் உங்களது சிந்தனை சரியானது என அர்த்தம். 

ஆனால் பலர் இதைப் புரிந்து கொள்ளாமல் நடப்பதாலேயே, பிரச்சனைகளில் போய் சிக்கிக் கொள்கிறார்கள். சரியாக சிந்திப்பவர்களுக்கு எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். அவசரப்பட்டு கோபப்பட மாட்டார்கள், தேவை இல்லாமல் பொய் பேச மாட்டார்கள், எதையும் நிறுத்தி நிதானமாக செய்யும் தன்மை அவர்களிடம் இருக்கும். 

எனவே நீங்களும் சிறந்த சிந்தனையாளராக மாற, எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களை சிறப்பான மனிதராக மாற்றி வாழ்வில் நல்ல விஷயங்களை நோக்கி கொண்டு செல்லும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com