எதிர் மறை நிலைமையை, நேர்மறையாக மாற்றுவது எப்படி? இந்தக் கதையப் படியுங்க புரியும்!

motivation image
motivation imageImage credit - pixabay.com

வாழ்க்கையில் எதிர் பார்க்கும் படி எப்பொழுதும் நடை பெறும் என்று எதிர் பார்க்க முடியாது.

மும்பையில் ஒரு மானேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூடில் நடைப் பெற்ற நிகழ்வு, உண்மை சம்பவத்தை விளக்குகின்றது.

அந்த மேலாண்மை கழகத்தின் (Management Institute ) கடைசி செமிஸ்டர் மாணவ, மாணவிகளுக்கு வேலைக்கான மாதிரி நேர்காணல் (mock interview session) ஏற்பாடு செய்துயிருந்தனர், குறிப்பாக மனித வளம் சிறப்பு மாணவர்களுக்கு (Human Resourses Specialization students) மாணவ, மாணவியர்கள் தயாராக வந்து இருந்தனர். ஆவலுடன் காத்து இருந்தனர்.

அந்த இன்ஸ்டிட்யுட்டின் டைரக்டர், HR டிபார்ட்மென்ட் தலைவர், ப்ரொபசர்கள் குழுமியிருந்தனர்.

துறை சம்பந்தப்பட்ட ஒரு ப்ரொபசர் எல்லோரையும் வரவேற்று, நேர்முறை தேர்வுக்கு (interview) எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கினார்.

அந்த, ’மாதிரி நேர்காணல்’ தேர்வினை நடத்த, அனுபவம் மிக்க மனிதவள நிபுணர் வரவழைக்கப்பட்டுயிருந்தார்.
அவரும், அந்த இன்ஸ்டிட்யூடின் பேராசிரியர் ஒருவரும். அந்த மாதிரி தேர்வு நடத்தினார்கள்.

எல்லா மாணவ, மாணவிகளும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்களால் இயன்றவரை நன்றாகவே பதில் அளித்தனர். விளக்கங்கள் கொடுத்தனர். விரு விருப்பாக நடந்தது. பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புது அனுபவம். உற்சாகத்துடன் பங்கு பெற்றனர்.

வந்திருந்தவர் ரத்தின சுருக்கமாக கேள்விகள் கேட்டு, பங்கு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.

மாதிரி நேர்காணல் முடிந்ததும், மாணவ, மாணவியர் (அங்கு குழுமியிருந்த மனிதவளத்துறை சார்ந்த பேராசிரியர்கள் உட்பட) எதிர் பார்க்காத , முக்கிய நிகழ்வு ஒன்று நடந்தது.

வந்த மனிதவள நிபுணர் கூறினார், அந்த மாணவ, மாணவியர்களுக்கு ஒரு பிராக்டிக்கல் டெஸ்ட் என்று.

எல்லோருக்கும் பொதுவாக ஒரே ஒரு தருணம் பற்றி விளக்கிவிட்டு, ஒவ்வொருவரும் எப்படி இந்த தருணத்தில் வேலை செய்வார்கள் என்பதை எழுதவேண்டும், அதற்கான காரணம் உட் பட.

அந்த சூழ்நிலை, தருணம் பின் வருமாறு;
நீங்கள் HR மேலாளராக அமர்த்தப்பட்டு , அன்று காலையயில்தான் வேலையில் சேர்ந்து உள்ளீர்கள். அந்த கம்பெனி பிரபலமான ஒன்று. பல வருடங்களாக இயங்கி வருகின்றது. நீங்கள்தான் புதியவர், அந்த கம்பெனிக்கு. உங்களுடைய முதல் கையெழுத்தை பெற கம்பெனியின் உங்கள் அந்த டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட கடிதம் மேஜைமீது காத்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் ஆவலுடன், ஆர்வத்துடன் அந்த கடிதத்தில் எழுதியிருக்கும் விவரத்தை படிக்கிறிர்கள். அதிர்ந்து போகிறீர்கள். உங்களை அறியாமலே ஒரு வித நடுக்கம், தயக்கம் தங்களை பற்றிக் கொள்கின்றது.

அப்படி என்னதான் அந்த கடிதம் கூறியது. முதல் நாள் மேல்மட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட பணிபுரிபவரை வேலையில் இருந்து நீக்குவது (terminate) என்று. அந்த உத்தரவை தங்கள் கையழுத்து இட்டு, அந்த குறிப்பிட்ட நபருக்கு கொடுக்க வேண்டும். இந்த பணி, கம்பெனி பாலிசி, ரூல்ஸ் படி தங்களது.
நேர்மறை சூழ்நிலையில் வேலையை ஆரம்பிப்பதையே யாரும் விரும்புவார்கள். ஆனால், இப்பொழுது தாங்கள் எதிர்மறை பணியை அதுவும் துவக்க பணியாக செய்து முடிக்க வேண்டிய நிலைமையில் உள்ளீர்கள்.

தாங்கள் உங்கள் கையழுத்தை போடுவீர்களா அல்லது மாட்டீர்களா..? முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டாகிவிட்டது. உங்களுக்கு விளக்கம் அளிக்க யாருமில்லை.

ஒரு வேளை தாங்கள் கையெழுத்து இடாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரும்.

கையெழுத்து இட்டால் தாங்கள் ஒருவரின் வேலை போவதற்கு உதவியதாக தங்கள் மனம் வருந்த செய்யும், அதுவும் தாங்கள் வேலைக்கு சேர்ந்த அன்றே இந்த நடவடிக்கை எடுத்ததற்கு.

எதிர்மறையான சூழ்நிலையை நேர்மறையாக மாற்ற முடியுமா..? என்றும் கேட்கப்பட்டு இருந்தது.

வந்திருந்த மனிதவள நிபுணர் மேற்படி விளக்கிவிட்டு, சிறிது நேரம் அளித்தார். மாணவ, மாணவியர்கள் தங்கள் முடிவுகள், கருத்துக்கள் எழுதி கொடுத்தனர். அவர் எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டார், வேகமாக படிக்கும் திறமையை உபயோகித்து.


குழுமியிருந்த எல்லோரும், அவர் என்ன கூறப் போகிறார் என்பதை அறிய காத்துக் கொண்டு இருந்தனர். அந்த நிபுணர், மாணவ, மாணவியர்களை மனதார பாராட்டினார்.

பெரும் பாலானவர்கள் தங்கள் தயக்கங்களை வெளிப் படுதியிருந்தனர். ஒரு சிலர் கையெழுத்து போட்டுவிட்டு மறந்து விடுவேன் என்றும் எழுதியிருந்தனர். ஆனால் அவர்களால் எப்படி எதிர்மறை சூழ்நிலையை, நேர்மறை சூழ்நிலைக்கு மாற்றி தங்கள் பணியை செவ்வனே செய்வது என்பதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. அதை பற்றி அறிய ஆவலுடன் இருந்தனர்.

இதையும் படியுங்கள்:
உடுமலைப்பேட்டையில் உல்லாசமாய் சுற்றிப் பார்க்க வேண்டிய 7 இடங்கள்!
motivation image

அந்த நிபுணர் விளக்கினார். உங்கள் கடமையில் இருந்து நீங்கள் தவறக் கூடாது. அதே சமயத்தில் தாங்கள் போடும் முதல் கையெழுத்து (அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது) நேர்மறை சூழ்நிலையில் ஆரம்பிக்க வேண்டும் (you should affix your first signature while starting your work on the first day on a POSITIVE Note) அத்தகையை செய்கை/ செயல் தங்கள் கைகளிலும், முடிவிலும் தான் இருக்கிறது, என்று கூறிவிட்டு சிறிது நிறுத்தினார். இவர் இப்படி கூறியதும், மாணவ, மாணவியர்களுக்கு தெளிவும், நம்பிக்கையும் காணப் பட்டது முகங்களில். மேலும் கேட்க ஆர்வம் ஏற்பட்டது.

அவர் வினவினார், கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள், ஒரு காகிதத்தில் இந்த நல்ல வேலை கிடைக்க உதவியதற்கு மனமார்ந்த நன்றி என்று கடவுளுக்கு எழுதிவிட்டு உங்கள் முதல் கையழுத்தை அலுவலகத்தில் போட்டுவிட்டு உங்கள் பணியை தொடரவும்.

மேலும் தொடர்ந்தார், ஒருவேளை கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால், ஒரு காகிதத்தில் உங்களுடைய அன்பான பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கூறி எழுதிவிட்டு உங்கள் முதல் கையெழுத்தை அலுவலகத்தில் ஒரு நல்ல மனநிறைவான செய்கைக்கு உபயோக்கித்து விட்டு பணியை தொடரவும், என்று முடித்தார். மாணவ, மாணவிகள் மற்றவர்களும் இந்த கோணத்தில் சிந்திக்கவில்லை. அவர் கூறியதை கேட்டு எல்லோரும் கைகள் தட்டி மகிழ்ச்சியையும், நன்றிகளையும் வெளிப்படுத்தினர்.

முடிவும், செயல்பாடும் ஒருவரிடம் இருக்கும்பொழுது, சிந்தித்து செயல்படுவது நேர்மறையான சூழ்நிலையை ஏற்படுத்தி எதிர்மறையான பிரச்னக்கு தீர்வுகாண உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com